தங்கம் விலை.. ஒரே நாளில் கண்ட சரிவு.. நகை வாங்க போறவங்களுக்கு செம லக் தான் போங்க

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : தங்கத்தின் விலையில், யாரும் எதிர்பார்க்காத அளவு அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை.. ஒரே நாளில் கண்ட சரிவு.. நகை வாங்க போறவங்களுக்கு செம லக் தான் போங்க
Advertising
>
Advertising

தமிழகத்தில் தங்கம் விலை, கடந்த நான்கு மாதங்களாகவே, ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. ஒரு கட்டத்தில், தங்கத்தின் விலையை உறுதி செய்ய முடியாமலும், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, தங்கத்தை எப்போது வாங்குவது என்ற குழப்பமும் மக்கள் மத்தியில் நீடித்து வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம், ஒரு கிராம் தங்கம் 4,637 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 37,096 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
chennai gold price decreased and full details here

தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாயைத் தாண்டியதால், பொது மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராமிற்கு 59 ரூபாய் குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் 472 ரூபாய் குறைந்து, தற்போது 36,624 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தங்கத்தின் விலை ஒரே நாளில், சுமார் 400 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதால், நகையை வாங்க திட்டம் போடும் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

GOLD, PRICE, CHENNAI, தங்கம் விலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்