'இந்த மாதிரி'.. 'கோலம் போட்ட சென்னை பெண்கள்!'.. 'காலையிலேயே நடந்த பரபரப்பு சம்பவம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரங்கோலி கோலம் போட்ட 5 பேரை தடுத்து நிறுத்தி போலீஸார் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களும், அந்த சட்டத்தை விமர்சிக்கும் வகையில் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்படி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவான CAA, NPR உள்ளிட்டவற்றின் மீதான தங்கள் அதிருப்தியை சென்னை பெசண்ட் நகரில் ரங்கோலி கோலமாக போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஈடுபட்ட 1 ஆண் மற்றும் 6 பெண்கள் என 7 பேர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

KOLAM, RANGOLI, CAA, NPR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்