எமனாக மாறிய கூல் டிரிங்க்ஸ்!.. சல்லடை போட்டு அலசிய அதிகாரிகள்!.. மர்ம மரணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குளிர்பானம் அருந்தி சென்னை பெசன்ட் நகர் சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ் - காயத்ரி தம்பதியின் மகள் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயதான மீனா கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே இருந்த மளிகைக் கடையிலிருந்து 10 ரூபாய் குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்துள்ளார்.
அதைக் குடித்த சற்று நேரத்திலேயே திடீரென வாந்தி எடுக்கத் தொடங்கிய மீனா, சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்தார். மேலும், அவரது உடலும் நீல நிறமாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உறவினர்கள் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி உயிரிழந்ததற்கு அவர் குடித்த குளிர்பானம் காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்ததால், சிறுமி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த குளிர்பானத்தை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்மந்தப்பட்ட அந்த மளிகைக் கடையில் இருந்தும் மீதமுள்ள குளிர்பான பாட்டில்களைக் கைப்பற்றினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடந்த 5ம் தேதி சம்மந்தப்பட்ட குளிர்பானத்தை உற்பத்தி செய்த அக்சயா ஃபுட் புரோடக்ட்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்நிறுவனத்தை தற்காலிகமாக மூடிச் சென்றனர். இந்நிலையில், இன்று மீண்டும் வந்த அதிகாரிகள், நிறுவனத்தை நிரந்தரமாக மூடி சீல் வைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'ஏய்! இங்க வா... அடிக்கலாம் மாட்டேன்...' - அட்ரஸ் கேக்குற மாதிரி அருகே வந்து.. இளைஞர் பார்த்த வேலை... பதிலுக்கு, தரமான சம்பவம் செய்துவிட்ட இளம்பெண்...!
- கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா...? தயவு செய்து எனக்கு ஒரு 'நியாயம்' சொல்லுங்க...! 'திருமண ஊர்வலத்தில் மணமகள் செய்த காரியம்...' - உடைந்து நொறுங்கி போன மணமகன்...!
- 'மொபைல் போனில் வந்த ஒரு டெக்ஸ்ட் மெசேஜ்...' 'உள்ள இருந்த கண்டென்ட் படிச்சதும் வந்த ஆசை...' - எல்லாம் முடிச்சிட்டு செக் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
- ‘அம்மா, அப்பாவை காணோம்’!.. ஒத்தையில நின்னு அழுதுட்டு இருந்த 12 வயது சிறுமி.. ‘யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது’.. அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை..!
- சோபாவுக்கு பின்னாடி கிடைச்ச 50 வருட பழைய ‘லெட்டர்’.. படிச்சு பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த தம்பதி..!
- தளபதியோட ‘வெறித்தனமான’ Fan-ஆ இருப்பாங்க போலயே.. நான் மலேசியாவில் இருந்து ‘சென்னைக்கு’ வந்ததே இதுக்காகதான்..!
- 22 கோடி ஆண்டு பழமையான ‘டைனோசர்’ கால்தடத்தை கண்டுபிடித்த 4 வயது குழந்தை.. பெற்றோருடன் வாக்கிங் போகும்போது நடந்த ஆச்சரியம்..!
- 'அவ ஆசை படுறது தப்பில்ல... ஆனா'... 12 வயதிலேயே 'திருநங்கை'யாக மாறிய குழந்தை!.. ஆசையை கேட்டு அதிர்ந்து போன தாய்!
- 65 மணிநேரம் போராட்டம்.. ‘நிலநடுக்க’ இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 வயது குழந்தை.. நெஞ்சை ‘பதற’ வைத்த நொடிகள்..!
- ‘22 வயது பெண் செய்த காரியம்!’... இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டதும்’.. உடனே ட்ரேஸ் செய்து ‘நேரில்’ வந்த போலீஸ்!