'ஸ்வைப்பிங் மெஷின் வாங்கி வச்சிட்டு...' 'ஏடிஎம் கார்டு திருடியிருக்கார்...' 'அதுவும் அந்த கார்டு தான் மெயின் டார்கெட்...' - ஹைடெக் மோசடி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனியார் வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் வைஃபை குறியீடு கொண்ட என்.எஃப்.சி ( NFC ) டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி 6 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது.
காட்டுபாக்கத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் சுமார் 4 ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தந்தையும் முன்னாள் வங்கி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சரவணன் போலி ஆவணங்கள் மூலம் சிவக்குமார் என்ற பெயரில் வங்கி கணக்கையும் எஸ்.கே.மோட்டார்ஸ் என்ற பெயரில் போலி நிறுவனத்தையும் தொடங்கி, அதனைக் கொண்டு என்எஃப்சி தொழில்நுட்பம் கொண்ட பேடிஎம் நிறுவன பிஓஎஸ் ஸ்வைப்பிங் மெசின் மூலம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
போரூரை சேர்ந்த ஹரி விஸ்வநாதன் உபயோகப்படுத்தி வந்த ஐசிஐசிஐ வங்கியின் நியர் ஃப்ரிக்குவன்சி டெபிட் கார்டு ஜூலை மாதம் 29-ம் தேதி காணாமல் போயுள்ளது மேலும் ஹரியும் அதுக் குறித்து எந்தவித கவனமில்லாமல் இருந்துள்ளார். மேலும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து அடுத்தடுத்து 70,000 ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது என குறுஞ்செய்தி வரவே தான் ஏ.டி.எம் கார்டு திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் தான் பல நாட்களாக சரவணன் செய்துகொண்டிருந்த மோசடி சம்பவம் வெளிவந்துள்ளது.
சரவணன் பெரும்பாலும் இம்மாதிரியான நியர் ஃப்ரிக்குவன்சி டெபிட், கிரெடிட் கார்டுகளை திருடி மட்டுமே கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் எனவும், இந்த கார்டுகளை கொண்டு ஆன் லைன் மூலம் பொருட்களை வாங்கினாலோ சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், போலி நிறுவனத்தின் பெயரில் ஸ்வைப்பிங் மெஷின் வாங்கி வைத்து மோசடி செய்து வந்துள்ளார் எனவும் போலீசார் கூறுகின்றனர்.
மேலும் கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை திருடியிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் சரவணனின் வீட்டிலிருந்து 13 நியர் ஃப்ரிக்குவன்சி டெபிட் கார்டுகள், பே-டிஎம் ஸ்வைபிங் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
பணத்தை பறிகொடுத்த ஹரி விஸ்வநாதன் அவர்கள், ஏ.டி. எம் காணவில்லை என 24 மணி நேரத்துக்குள் புகாரளிக்காமல் தாமதமாக மூன்றாவது நாள் வங்கியில் புகார் அளித்ததால் திருடப்பட்ட பணத்தை திருப்பியளிக்க ஐசிஐசிஐ வங்கி கிளை மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- படம்பிடிக்கப்பட்ட வரைபடத்துடன் கூடிய நிலப்பட்டாக்கள்!.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த... சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்!.. முழு விவரம் உள்ளே
- ‘போர் அடிக்காமா இருக்க’... இனி ரயில் பயணத்திலும் சினிமா, இசை நிகழ்ச்சிகள் பார்க்கலாம்... புறநகர் ரயில்கள் உள்பட... ரயில்வே நிர்வாகத்தின் புதிய வசதி!
- “காலை 7-8 தான் மெயின் டைம்!”.. “வரிசையாக லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து”.. “சென்னை நபர் செய்த தில்லாலங்கடித் தனம்”!
- இனி ‘சிக்னல்’ இல்லாமலும் ‘போன்’ பேசலாம்... ‘அசத்தல்’ வசதியை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம்...
- 'இலவச WiFi வசதி'... 'எந்த மாவட்டத்தில் தெரியுமா?'... விவரம் உள்ளே!
- ‘விரைவில் இலவச வைஃபை’... ‘15 ஜிபி ஃப்ரீ டேட்டா’... ‘கலக்கும் மாநில அரசு’!