'நடிகையான உங்கப் பொண்ண'... 'கல்யாணம் பண்ணி கொடுக்கலனா'... 'மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது'... 'தாய் கொடுத்த பரபரப்பு புகார்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகனை, நடிகையின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ராஜசேகரன் மற்றும் அவரது மகன் அமுதன் வெங்கடேசன் ஆகிய இருவரையும், நடிகை சுருதியின் தாய் சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தாய் சித்ரா கொடுத்த புகாரில், ‘கைது செய்யப்பட்ட ராஜசேகரன் தூரத்து உறவினர் என்றும், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் நடிகை ஸ்ருதி படித்துக் கொண்டிருக்கும் போது, ராஜசேகரன் மகன் அமுதன் வெங்கடேசன் ஒருதலைப்பட்சமாக காதலித்ததாக தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியதாகவும், ஸ்ருதி மற்றும் அவரது தாய் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து தனது மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அமுதன் வெங்கடேசன் தொந்தரவு செய்து வந்ததாகவும், இதுதொடர்பாக 4 முறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் செய்து வைக்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோவும் வெளியிட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
ஒருகட்டத்தில் கோவையை சேர்ந்த 5 பேர் கும்பலுடன் சேர்ந்து தங்களிடம் பணம் பறிக்க முயன்றதாகவும், இதற்காக தங்கள் மீது பொய் புகார்கள் அளித்து, அதனை திரும்பப் பெறுவது போல நாடகமாடியதாகவும் நடிகை சுருதியின் தாய் சித்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதி வெளிநாட்டிற்கு படிக்கச் சென்று, மீண்டும் சென்னை வரவுள்ள நிலையில், கடந்த 5-ம் தேதி நடிகையின் தாயான சித்ராவை மடக்கி, ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கவில்லை எனில் ஆசிட் வீசுவதாக ராஜசேகரன் மற்றும் அமுதன் வெங்கடேசன் மிரட்டியதாக’ புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரன், அமுதன் வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, நடிகை ஸ்ருதி மற்றும் தாய் சித்ரா ஆகியோர் குடும்பமாக சேர்ந்து 2 வருடங்களுக்கு முன்பாக மேட்ரிமோனியல் மூலமாக பலரையும் மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பிய நிலையில், அந்த விவகாரத்தில் ராஜசேகரனுக்கும், அமுதனுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்த 3 மாதங்களும்’... ‘பத்திரமா இருந்துக்கோங்க’... ‘எச்சரிக்கும் வானிலை மையம்’... தகவல்கள் உள்ளே!
- பெண்ணின் இன்ஸ்டாகிராம் ‘ஸ்டேட்டஸ்’ பார்த்து... ‘வீடியோ’ அனுப்பிய ‘சென்னை’ மாணவருக்கு... ‘அடுத்தடுத்து’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- ‘குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்’.. ‘வழிமறித்த மர்மகும்பல்’.. நெல்லை அருகே பயங்கரம்..!
- 'கணவன் தற்கொலை செய்து கொண்டதாக... புகார் அளித்த மனைவி!'... விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!... திக் திக் நிமிடங்கள்!
- 'கேன் உற்பத்தியாளர்கள் போட்ட குண்டு'... 'தண்ணீர் கேன் கிடைக்குமா'?... அச்சத்தில் சென்னைவாசிகள்!
- விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம்... சாதுவாக பேசி... திருடர்கள் கைவரிசை!... சென்னையில் பரபரப்பு!
- VIDEO: ‘காசிமேடு அருகே பயங்கரம்’.. அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை.. பரபரக்க வைத்த சிசிடிவி வீடியோ..!
- 'இந்த வேலைக்கும் அப்ளை பண்றீங்களா'?... 'சென்னையில் குவிந்த என்ஜினீயர்கள்'... மிரண்ட 10-ம் வகுப்பு படித்தவர்கள்!
- ‘திருமணமான’ 12 நாட்களில் ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘புதுப்பெண்’... ‘உறைந்துபோய்’ நின்ற கணவர்... சென்னையில் நடந்த ‘சோகம்’...
- ‘காதலர் தினத்தில் கல்யாணம்‘... ‘11 நாட்களிலேயே’... ‘மாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்’... 'அதிர்ச்சியான இளம்பெண்'!