'எங்க மொத்த சொத்தே நீ தானே'... 'இதுக்காகவா இப்படி செஞ்ச'... 'கதறிய பெற்றோர்'... சென்னை என்ஜினீயரிங் மாணவர் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்காக காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த மணலியைச் சேர்ந்தவர் நடராஜன். 21 வயது இளைஞரான இவர், என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு நடராஜன் தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை வெகுநேரமாகியும் நடராஜன், அறையிலிருந்து வெளியே வரவில்லை. காலையில் சாப்பிட நேரம் ஆகிவிட்டதே இன்னும் மகன் வெளியே வரவில்லையே என அவரது பெற்றோர், மகனின் அறைக்குச் சென்று பார்த்துள்ளார்கள்.
அப்போது அவர்கள் கண்ட காட்சி நடராஜனின் பெற்றோரை நிலைகுலையச் செய்துள்ளது. தாங்கள் ஆசையாக வளர்த்த மகன் தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கதறித் துடித்தார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி போலீசார், தூக்கில் தொங்கிய நடராஜன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் மாணவர் நடராஜன், தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண், வேறு ஒரு மாணவரிடம் சிரித்துப் பேசி பழகி உள்ளார். இதைப் பார்த்த நடராஜன் நான் உயிருக்கு உயிராகக் காதலிக்கும் பெண், வேறு ஒருவருடன் சிரித்துப் பழகுவதால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.
தான் இந்த கொடூர முடிவை எடுக்கும் முன்பு நடராஜன் தனது பெற்றோரைச் சிறிதேனும் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். தற்போதைய இளைஞர்கள் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அவரசப்பட்டு தற்கொலை என்னும் கொடூர முடிவை எடுப்பது வேதனையாக உள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளார்கள். ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாழ்க்கையை இதுபோன்ற காரணங்களுக்காக இளைஞர்கள் வீணாக்கிக் கொள்வது தான் சோகத்தின் உச்சம்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்தது!.. பாதிக்கப்படுவோர் vs குணமடைவோர் எண்ணிக்கை... என்ன சொல்கிறது கொரோனா?
- ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி’!.. விபரீத முடிவெடுத்த கணவர்.. சிக்கிய உருக்கமான கடிதம்..!
- "மாணவிகளுக்கு தைரியம்!".. "அயராத கொரோனா பணி!" .. 'சென்னையின்' பிரபல 'மருத்துவமனை' டீனுக்கு 'கொரோனா'!
- தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 11 பேர் கொரோனாவுக்கு பலி!.. பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது!.. முழு விவரம் உள்ளே
- என் 'தம்பி' சாகுறதுக்கு... ஸ்கெட்ச் போட்டு 'கொலை' செய்த அண்ணன்... 'சென்னை'யில் நடந்த பயங்கரம்!
- என்ன காதலிச்சதுக்கு '5 லட்சம்' நஷ்டஈடு குடு... கல்லூரி பெண்ணை வீடு 'புகுந்து' மிரட்டிய வாலிபர்!
- நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு நற்செய்தி!.. நிம்மதி பெருமூச்சு விடத்தயாராகும் மக்கள்!.. என்ன காரணம்?
- தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா!.. இன்று ஒரே நாளில் 7 பேர் பலி!.. முழு விவரம் உள்ளே!
- 'பாத்ரூம் போணும், பைக்க நிறுத்துங்கன்னு சொன்ன மனைவி'... 'திரும்பி பார்த்தபோது கணவன் கண்ட காட்சி'... ஒரு நொடியில் நடந்த சோகம்!
- தமிழகத்தில் துளிர்விடும் நம்பிக்கை!.. இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்தனர்!.. முழு விவரம் உள்ளே