'இந்த வேலைக்கும் அப்ளை பண்றீங்களா'?... 'சென்னையில் குவிந்த என்ஜினீயர்கள்'... மிரண்ட 10-ம் வகுப்பு படித்தவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 10-ம் வகுப்பு மட்டுமே போதும் என்ற தகுதி கொண்ட வேலைக்கு, என்ஜினீயரிங் படித்த பலர் விண்ணப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வேலையில்லா திண்டாட்டத்தைப் பிரதிபலிப்பதாகப் பலரும் கூறியுள்ளார்கள்.

சென்னையில் நாளுக்கு நாள் வாகனப்பெருக்கம் அதிகரித்துவரும் நிலையில், மாநகராட்சி சார்பில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட முக்கியமான பகுதிகளில் 2 ஆயிரம் பார்க்கிங் பகுதிகளை உருவாக்கிப் பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்படும் செயலிகள் மூலம் வாகன ஓட்டிகள் எங்கு பார்க்கிங் வசதி இருக்கிறது, அந்த குறிப்பிட்ட இடத்தில் வாகனம் நிறுத்த இடம் இருக்கிறதா என அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

அனைத்தும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த பார்க்கிங் ஸ்பாட்டுகளை, தனியார் நிர்வகிப்பார்கள். அதற்கான கட்டணங்களை வாகன ஓட்டிகள் ஆன்லைனில் செலுத்த முடியும். சென்னையில் இதற்காக 222 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பார்க்கிங் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதுபோன்ற வேலைக்கு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அல்லது எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களே அதிகம் பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதில் பெரிய ட்விஸ்ட்டாக விண்ணப்பித்த 1400 பேரில், 70 சதவீதம் பேர் பட்டதாரிகள் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்களே அதிகம். இதனை அறிந்த எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள் சற்று மிரண்டு தான் போனார்கள். இந்நிலையில் சிவில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் ஒருவர் கூறும்போது, ''ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக வேலைவாய்ப்பு இல்லை. எனவே இந்த வேலைக்கு வந்ததாக'' கூறியுள்ளார்.

இதற்கிடையே 10-ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட வேலைக்குப் பட்டதாரிகள் வந்து குவிவதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் இருப்பதைப் பிரதிபலிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

CHENNAI, ENGINEERING GRADUATES, PARKING ATTENDANT JOBS, UNEMPLOYED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்