‘கொடிகளை அகற்றிய இன்ஜினியர் மீது சரமாரித் தாக்குதல்’.. ‘மதிமுக தொண்டர்களால்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்சிக் கொடிகளை அகற்றிய மாநகராட்சி செயற்பொறியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கரணையில் பேனரால் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து திருமண நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்காக சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம் வரை மதிமுக கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் அடையாறு செயற்பொறியாளர் வரதராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த மதிமுக கொடிகளை அகற்றியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்ரமணி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பொறியாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி தான் அகற்றுகிறோம் என அவர்கள் கூற அதில் ஆத்திரமடைந்த சுப்ரமணி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வரதராஜனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார் சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பாய்ஸ் உங்க உடம்ப ரெடி பண்ணுங்க’.. நிஜ 'தீரன்' தொடங்கி வைத்த புதிய முயற்சி!
- ‘திடீரென அபார்ட்மெண்டுக்குள் நுழைந்த’.. ‘மர்ம நபர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- 'தொடரும் சோகம்'...'அலட்சியத்தால் போன இளைஞரின் உயிர்'...தாம்பரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'ஆண்பாவம் பட பாணியில்'...'டெலிவரி பாய்களிடம் ஆட்டைய போட்ட'...'சாப்பாட்டு கொள்ளையன்'!
- ‘பார்க்கில் சைக்கிளிங் போனவருக்கு’.. ‘ஆங்கிரி பேர்டால் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்’..
- ‘ஃபைன் மட்டும் போட்டீங்கன்னா இங்கேயே’.. ‘இளம்பெண்ணின் செயலால் உறைந்து நின்ற போலீஸார்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘இப்படி ட்ரெஸ் பண்ணா தான் மாப்பிள்ளை கிடைக்கும்’.. ‘கல்லூரி செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- ‘சுபஸ்ரீ பலியான அதேப் பகுதியில்’... ‘பேனரை அகற்றியபோது’... ‘இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!