‘சினிமா ஷூட்டிங்கிற்கு கார்’.. ‘பொறியியல் மாணவர்களுக்கு குட்டி ஹெலிகாப்டர்!’.. புல்லட் திருட்டில் பட்டம் பெற்ற ‘இன்ஜினியர்’.. மிரள வைக்கும் நெட்ர்வொர்க்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருடப்பட்டும் புல்லட்களின் இன்ஜின் மூலம் குட்டி கார், ஹெலிகாப்டர்களைத் தயாரித்து மாணவர்களுக்கு விற்றுவந்திருக்கிறார் சென்னை இன்ஜினீயர். அத்துடன் சினிமா படத்துக்காகப் பிரத்தேயமாக பைக் ஒன்றையும் தயாரித்துக்கொடுத்ததுதான் இதில் ஹைலைட்.

இரண்டு ஆண்டுகளுக்கும் திருடப்பட்டுவந்த புல்லட் பைக்குகள் தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தததை அடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், மேற்பார்வையில் இணை கமிஷனர் சுதாகரின் தனிப்படை போலீஸ் எஸ்.ஐ-சுதாகர், தலைமைக் காவலர் சரவணகுமார் ஆகியோர் புல்லட் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆராய்ந்தபோது, புல்லட்களைத் திருடுபவர்கள், வண்டிகளை களவாடிச் சென்று குறிப்பிட்ட சில தூரத்தில் நிறுத்திவிட்டு, பின்னர், அந்த பைக்கை மீண்டும் எடுத்துச் சென்று இன்னோர் இடத்தில் நிறுத்துவது தெரியவந்தது. திருடர்களின் இந்த ட்ரிக்ஸை தொடர்ந்து சிசிடிவி மூலம் கவனித்து வந்த போலீஸாரின் நீண்ட நெடிய தேடுதல் வேட்டைக்குப் பிறகு தஞ்சாவூர் முகமது சஃபி, கேரளாவைச் சேர்ந்த சிபி உள்ளிட்டோரின் மூலம் சென்னையில் புல்லட் பைக்குகளைத் திருடி தமிழகம் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் விற்றது தெரியவந்தது. அத்துடன் புல்லட் திருட்டில் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் இருந்ததை அறிந்த போலீஸார், அடுத்தடுத்து திருடர்களை சேஸ் செய்ததில், களவாடப்பட்ட பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சென்னை புதுப்பேட்டையில் திருட்டு பைக்கின் பாகங்களை பிரித்தெடுக்கப்பட்டு விற்பனை செய்த சுல்தான், இஸ்மாயில்,  புல்லட் இன்ஜின்களை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கிய கோட்டூர்புரம் இன்ஜினீயர் சோகன்குமார் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது புதுப்பேட்டையிலிருந்து புல்லட் இன்ஜின்களை வாங்கி அதைக்கொண்டு இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு குட்டிக் கார், ஹெலிகாப்டர் என சோகன்குமார் புராஜெக்ட் செய்து கொடுத்ததும், அதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, குட்டி கார், குட்டி ஹெலிகாப்டரை 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரைக்கும் விற்றதும் தெரியவந்தது.

எனினும் புராஜெக்ட் செய்யப்பட்ட காரும் ஹெலிகாப்டரும் திருட்டு பைக்கின் இன்ஜின் என்கிற தகவல் மாணவர்களுக்குத் தெரியாது. சென்னை கிழக்குக் கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சோகன்குமார், சினிமா படம் ஒன்றுக்கு திருட்டு புல்லட் இன்ஜின் மூலம் பிரத்யேகமாக கார் ஒன்றை செய்து கொடுத்திருக்கிறார். அதையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்த நெட்வொர்க்கிடம் இருந்து 39 புல்லட் பைக்குள், 6 விலையுயர்ந்த பைக்குகள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் புதுப்பேட்டையில் திருட்டு புல்லட் பைக் பாகங்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து  விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்