முதல்ல ‘விளையாட்டா’ தான் பண்ணேன்... அப்புறம் ‘ரசிகைகள்’ கொடுத்த ‘வரவேற்பை’ பாத்துதான்... ‘பரபரப்பு’ புகார்களில் சிக்கி ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பிரபலங்களின் பெயரில் போலி கணக்கைத் தொடங்கி பெண்களை ஏமாற்றிவந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சென்னை போலீசாருக்கு பெண்கள் சிலரிடமிருந்து அடுத்தடுத்து பரபரப்பு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்களில் அவர்கள், “எங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டிற்கு டிவி சீரியல் ஹீரோ ஒருவருடைய போட்டோவுடன் இருந்த ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றிலிருந்து ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்தது. அதை அக்செப்ட் செய்ததும் எங்களிடம் நன்றாகப் பேசிய அந்த ஹீரோ எங்களுடைய செல்போன் எண்களைக் கேட்டார். அந்த ஹீரோவை நம்பி நாங்கள் அதைப் பகிர்ந்ததும் அவர் எங்களுடன் போனில் நன்றாகப் பேசினார்.
இதையடுத்து அந்த ஹீரோ எங்களிடம் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்புமாறு கேட்க அதையும் பகிர்ந்தோம். அதற்கு பதிலாக அவர் முகம் தெரியாத அவருடைய தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை எங்களுடன் பகிர்ந்தார். நாங்கள் ஏன் முகம் தெரியாத புகைப்படங்களை அனுப்புகிறார் எனக் கேட்டதற்கு நான் பிரபலமான ஹீரோ அதனால்தான் எனக் கூறினார்.
அதன்பிறகு அவரிடமிருந்து பணம் கேட்டு எங்களுக்கு போன் அழைப்புகள் வந்தன. அவர் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் எங்களுடைய புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துவிடுவேன் என அவர் மிரட்டினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் கேட்ட பணத்தை கொடுத்த பிறகும் தொடர்ந்து மிரட்டுகிறார். அந்த ஹீரோ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரபலமான சீரியல் ஹீரோவின் பெயரில் போலியான ஃபேஸ்புக் ஐடியைத் தொடங்கி விருத்தாசலத்தைச் சேர்ந்த விக்னேஷ் (33) என்பவரே இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்மீது சட்டம் 1982 சட்டப்பிரிவு 14 சைபர் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டம் போல ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போலீஸ் விசாரணையில் பேசிய விக்னேஷ், “இன்ஜினியரிங் படித்து முடித்த பிறகு வேலை எதுவும் இல்லாததாலேயே விளையாட்டாக முதலில் பிரபலங்களின் பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை போலியாகத் தொடங்கினேன். அதற்கு ரசிகர்கள், ரசிகைகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததை வைத்தே ரசிகைகளை ஏமாற்றி பணம் பறித்தேன். சில பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து அனுப்பியும், பணம் அனுப்பாத பெண்களை நேரில் சந்தித்தும் மிரட்டினேன்" எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிறுநீர் கழிக்க போன ‘சின்ன கேப்’.. ‘திரும்பி பார்த்தா BMW காரை காணோம்’.. அதிர்ச்சியில் உறைந்த தொழிலதிபர்..!
- ‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!
- 'மாமா உங்க பொண்ண என்கூட அனுப்ப மாட்டீங்களா'...'மருமகனின் வெறி செயல்'... கதிகலங்கிய குடும்பம்!
- 'சென்னை வந்த சாப்ட்வேர் என்ஜினீயர்'...'நவீன கருவி மூலம் சோதனை'...விமான நிலையத்தில் பரபரப்பு!
- 'இறந்த' பின்னும் மகனுக்கு 'தூக்க' மாத்திரைகளை கொடுத்து ... மகளுக்கு அவசர 'கல்யாணம்' நடத்திய தாய்... 3 வருடங்களுக்குப்பின் வெளியான ட்விஸ்ட்!
- 'திருமண' விருந்துக்கு சென்று திரும்பிய போது... 'நண்பர்களுக்கு' நேர்ந்த துயரம்... சம்பவ இடத்திலேயே '4 பேர்' பலி... 7 பேர் படுகாயம்!
- ‘குரைக்காத’ நாயால் கிடைத்த ‘க்ளூ’... ‘மெட்டியை’ கூட விட்டுவைக்காமல் செய்த ‘நடுங்கவைக்கும்’ காரியம்... ‘யூடியூப்’ பார்த்தே செய்ததாக ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
- 'சென்னையில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிப்பு!'... உப்பு நீக்கும் ஆலை மூடப்படுவதால்... அவசர தொலைபேசி எண்களை வெளியிட்டு... சென்னை மாநகராட்சி அதிரடி!
- '100 ஆண்டுகளுக்கு முன் மரணித்த மாமியார்!'... 'உடலை தேடிக் கண்டுபிடித்து அடக்கம் செய்த மருமகள்!'... உடல் எப்படிப்பட்ட நிலையில், எங்கிருந்தது தெரியுமா?... நடுங்கவைக்கும் 'நிஜ' த்ரில்லர்!
- 'ஆபாச தளங்களின் புது டெக்நிக்'... 'யாரும் சிக்கிடாதீங்க, அப்புறம் கைது தான்'... ஏ.டி.ஜி.பி எச்சரிக்கை!