‘தண்டவாள பராமரிப்பு’ சென்னை பீச் - செங்கல்பட்டு மின்சார ரயில்சேவை சில இடங்களில் ரத்து..! விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தண்டவாள பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுதினம் மின்சார ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயிலில் பயணம் செய்கின்றனர். வார இறுதியில் தண்டாவாள பாரமரிப்பு நடைபெறுவதால் மின்சார ரயில்கள் சில நிறுத்தப்படும் என்றும் பாஸ்ட் ரயிலும் சில ரத்து செய்யபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நாளை மறுதினம்  (23.10.2019) காலை 10:30 மணி முதல் 14:30 மணி வரை தண்டாவாள பணிக்காக சில வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில் காலை 9:20 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் ரயில் காட்டாங்குளத்தூர் வரை மட்டுமே இயங்கும் எனவும், காலை 9:30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 10:08 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் காட்டாங்குளத்தூர் வரை மட்டுமே செல்லும், காலை 10:56 மணிக்கு சென்னை கடற்கரையில் புறப்படும் செங்கல்பட்டு ரயில் கூடுவாஞ்சேரி வரை மட்டும் இயங்கும்.

முற்பகல் 11:48 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் காட்டாங்குளத்தூர் வரை மட்டும் செல்லும், பகல் 12:15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் 14:30 மணிக்குபின் வழக்கமான சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHENNAI, ELECTRICTRAIN, TIMING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்