‘ஒரு வாரத்துக்கு முன்பே தோண்டப்பட்ட குழி’.. சென்னை தம்பதி மரண வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தம்பதி மரண வழக்கில் டிரைவர் தீட்டிய திட்டம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

சென்னை மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனி பகுதியில் ஸ்ரீகாந்த் (வயது 65) மற்றும் அவரது மனைவி அனுராதா (வயது 60) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். ஸ்ரீகாந்த், குஜராத்தில் தனியார் ஐடி கம்பெனியை நடத்தி வந்துள்ளார். மேலும் ஆடிட்டராகவும் இருந்து வந்துள்ளார். இவர்களின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மகள் நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதால் கடந்த 6 மாதமாக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மகளுடன் கணவன், மனைவி இருவரும் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பிய தம்பதியினரை வீட்டில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த பதம்லால் கிருஷ்ணா (வயது 45) என்பவர் காரில் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தனது நண்பர் ரவி (வயது 39) என்பவருடன் சேர்ந்து தம்பதியினரை தாக்கி கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிவிட்டு நேபாளம் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

இதனை அடுத்து புகாரின் பேரில் மைலாப்பூர் காவல் ஆயவாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பதம்லால் கிருஷ்ணா மற்றும் ரவி இருவரும் ஆந்திராவுக்கு தப்பி செல்வதை அவர்களின் மொபைல் சிக்னல் மூலம் கண்டுப்பிடித்த போலீசார், ஆந்திரா செல்லும் வழியில் உள்ள சுங்க சாவடிகள் மற்றும் ஆந்திரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்துக்கொண்டே அவர்களை விரட்டிச் சென்றனர்.

மேலும் குற்றவாளிகளை பதம்லால் கிருஷ்ணா மற்றும் ரவியின் புகைப்படம் மற்றும் கார் எண் குறித்த விவரங்களை ஆந்திர போலீசாருக்கு கொடுத்தனர். இதனை அடுத்து ஓங்கோல் அருகே அவர்கள் சென்ற காரை ஆந்திர போலீசார் மடக்கி பிடித்தனர். உடனே ஆந்திரா விரைந்த தமிழ்நாடு போலீசார், அவர்களை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். மேலும் அவர்களிடமிருந்த தங்க, வைர நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடம் ஒன்றை விற்றது தொடர்பாக ரூ.40 கோடி பணம் இருப்பதாக வாகன ஓட்டுநர் கிருஷ்ணா முன்பு பேசியுள்ளனர். அந்தப் பணத்தை கொள்ளையடிப்பதற்காக பல மாதங்களுக்கு முன்பே பதம்லால் கிருஷ்ணா திட்டுமிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை ஓட்டுநர் பதம்லால் கிருஷ்ணா கார் மூலமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் ஏற்கனவே இருந்த ரவியும் பதம்லால் கிருஷ்ணாவும் இணைந்து முதல் தளத்திற்கு செல்லும் போதே பின் புறத்தில் இருந்து ஸ்ரீகாந்தை கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து அனுராதாவையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை அடுத்து வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், வைர கம்மல்கள், பிளாட்டின வளையல்கள் என ரூ.8 கோடிக்கும் அதிகமான நகைகளை கொள்ளையடித்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை டெட்டால் ஊற்றி கழுவியுள்ளனர். பின்னர் உயிரிழந்த இருவரையும் காரின் பின் இருக்கையில் தூங்குவது போல போட்டு, நெமிலிச்சேரியில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து புதைத்துள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து இருவரும் வரும் நாளை அறிந்த பதம்லால் கிருஷ்ணா ஒரு வாரத்திற்கு முன்பே இருவரையும் புதைப்பதற்காக பண்ணை வீட்டில் குழி தோண்டி, அதனை கோணிப்பை போட்டு மண்ணால் மூடி வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டு உரிமையாளர்களை கார் டிரைவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

CHENNAI, DRIVER, COUPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்