'சொந்தம் விட்டு போக கூடாது தான்'...'சொந்தக்காரங்க வந்தா என்ன பண்றது'?... சுகாதார துறை அதிகாரி விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மக்களை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை, உறவினர்கள் யாரும் அவர்களது வீட்டிற்கு சென்று சந்திக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் வரை 55 பேர் பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனிடையே சுகாதாரத்துறை இணை இயக்குனர் சம்பத், வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், '' சீனா, ஈரான், இத்தாலி, கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு சுற்றுலா, வேலை மற்றும் படிப்பு சம்பந்தமாக சென்றவர்கள் பலர் கொரோனா அச்சத்தால் தாயகம் திரும்பி வருகின்றனர்.

அவர்கள் முழுமையான கண்காணிப்புக்கு பின்னர் தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு வருபவர்கள், நேரடியாக பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்திற்கு அழைத்து வந்து தனியாக உள்ள அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எந்தவித நோய் தொற்றும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்களின் உறவினர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை 15 நாட்களுக்கு அவர்களது வீட்டுக்கு சென்று யாரும் பார்க்க வேண்டாம். அவர்கள் பார்க்க வந்தாலும் உங்கள் வீட்டில் அனுமதிக்க வேண்டாம். உறவினர்களாக இருந்தாலும் கூட பாதுகாப்பு முதலில் முக்கியம் என'' சம்பத் தெரிவித்துள்ளார்.

CORONAVIRUS, RELATIVES, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்