‘இருமல், காய்ச்சல்னு போனேன்... எனக்கு ஊசி போட்டு அரைமயக்கத்துல’... ‘சென்னையில்’ இளைஞருக்கு ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘மருத்துவர்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் உடல்நிலை சரியில்லையென மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவர் தவறாக நடந்துகொண்டதாக இளைஞர் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தென்மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னை மந்தைவெளியில் நண்பர்களுடன் தங்கி வேலை செய்துவருகிறார். சமீபத்தில் அவர் உடல்நிலை சரியில்லையென அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த கார்த்திக் என்ற மருத்துவர் அவரிடம் தவறாக நடந்துகொண்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் அவர், “கடந்த 5ஆம் தேதி திடீரென எனக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் நான் தங்கியிருக்கும் இடத்தின் அருகில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றிற்கு சென்றேன். அங்கிருந்த மருத்துவர் கார்த்திக் எனக்கு மருந்து, மாத்திரை கொடுத்து ஊசி போட்டுவிட்டு, என்னுடைய செல்போன் நம்பரையும் வாங்கிக் கொண்டார். பின்னர் என்னிடம் போனில் பேசிய அவர், 6ஆம் தேதி மருத்துவமனைக்கு வரும்படி கூறினார். அதைத்தொடர்ந்து அவர் வாட்ஸ்அப்பில், “நாளை சாம்பிள்ஸை கொடுக்கிறேன். இன்று மாலை என்னைச் சந்திக்கவும்” என மெசேஜ் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து நான் 6ஆம் தேதி மாலை கிளினிக் சென்று அவரை சந்தித்தேன். அப்போது அங்கு என்னையும், அவரையும் தவிர வேறு யாருமே இல்லை. என்னைப் பார்த்ததும் சிரித்த அவர், என்னிடம் உடல் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும் என கிளினிக் அருகில் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றதும் கதவு, ஜன்னல்களைப் பூட்டிய அவர் எனக்கு ஊசி போட்டார். அதன்பிறகு நான் அரைமயக்கத்தில் இருந்தபோது அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மயக்கத்தில் இருந்தால் அதை என்னால் தடுக்க முடியவில்லை.
அதன்பிறகு மயக்கம் தெளிந்ததும் அவரிடம் சண்டை போட்ட என்னை வலுக்கட்டாயமாக வெளியில் அனுப்பிவிட்டார். அந்த சம்பவத்தால் வேதனையடைந்த நான் முதலில் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தேன். பின்னர்தான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவர் மீது புகாரளிக்கிறேன். என்னைப் போல வேறு யாரும் அவரால் பாதிக்கப்படக்கூடாது. அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 406, 341, 377 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் டாக்டர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி, அவரைக் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வழக்கமான ‘தகராறு’ என நினைத்த அக்கம்பக்கத்தினர்... சிறிது நேரத்தில் நடந்த ‘பயங்கரம்’... ‘அடுத்தடுத்து’ கிடைத்த ‘சடலங்களால்’ அதிர்ந்துபோன போலீசார்...
- ‘நள்ளிரவில்’ கேட்ட குழந்தையின் ‘அழுகுரல்’... கணவன், மனைவி உட்பட ‘3 பேருக்கு’ நேர்ந்த கொடூரம்... தப்பிய ‘இளைஞர்களை’ மடக்கிப் பிடித்த போலீசார்...
- 'கத்தி'யால் தாக்கிய வாலிபர் ... அசராமல் பதிலடி கொடுத்த 'பள்ளி மாணவி' ... 'பெண்' போலீசுக்கு குவியும் பாராட்டு !
- ‘கொடூர கொரோனா: சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் அதிரடியாக ரத்து!’
- ‘30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து’... ‘அந்தரத்தில் பறந்து கீழே தண்டவாளத்தில் விழுந்த பைக்’... 'அதிவேகத்தில் சென்ற'... 'சென்னை என்ஜீனியருக்கு நேர்ந்த சோகம்'!
- ‘கணவரை விட்டுட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கோ’.. ‘இல்லனா..!’.. பகீர் கிளப்பிய சென்னை கார் டிரைவர்..!
- ‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- ‘தமிழகத்திற்குள்ளும்’ நுழைந்த ‘கொரோனா’... ‘ஓமனில்’ இருந்த வந்த ஒருவருக்கு ‘வைரஸ்’ பாதிப்பு... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ தகவல்...
- 'என்னோட உடம்பு நடுங்கும்'...'இந்த வேலைக்கு மட்டும் போகாதீங்க'...சென்னையில் கதறிய பெண்!
- ‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’... நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’... ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்...