சென்னை ‘டிஎம்எஸ்’ வளாகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு ‘கொரோனா’ தொற்று.. அதிகாரிகள் தீவிர விசாரணை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் என்ற ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. 108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத்துறை, காசநோய் தடுப்பு, தேசிய சுகாதார திட்டம் உட்பட பல்வேறு அலுவலகங்களும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளன.
இந்த நிலையில் ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரியும் 45 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வளாகத்தில்தான் தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொரோனா குறித்த செய்தியாளர் சந்திப்பை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. நேற்று தலைமை செயலரும் இங்கு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். இதில் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று எந்த வழியில் பாதிக்கப்பட்டிருக்கும்? என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
'இதற்கு' மட்டுமே விதிவிலக்கு... மலைக்கோட்டை நகரத்துக்கு 'கடுமையான' கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை!
தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கு நேரத்தில் 'கள்ளக்காதலியை' பார்க்க... 200 கிலோமீட்டர் 'பயணித்த' முதியவர்... ஹைலைட்டே காரில் ஒட்டியிருந்த 'ஸ்டிக்கர்' தான்!
- ‘கொரோனாவை சிறப்பாக கையாளும் 6 நாடுகள்’... ‘ஆட்சி செய்யும் இவங்க எல்லோருக்குமே’... ‘ஒற்றுப்போகும் ஒரு விஷயம்’... ‘பாராட்டும் நெட்டிசன்கள்’!
- ‘ஊரடங்கில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது’... ‘ஆண்களுக்கும், பெண்களுக்கும்’... ‘எச்சரிக்கை விடுத்த ஏடிஜிபி ரவி’!
- யாரெல்லாம் 'கொரோனா' பரிசோதனை... செய்துகொள்ள வேண்டும்?... வெளியான 'புதிய' தகவல்!
- கொரோனாவுக்கு எதிரான 'போரில்' வென்று விட்டோம்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த பிரதமர்... 'கட்டுக்குள்' கொண்டு வந்தது எப்படி?
- ‘ஆசையாக குளிக்கச் சென்ற சிறுமிகள்’... 'தாமரைக் கொடியில் சிக்கி நேர்ந்த துக்கம்'... 'கதறித் துடித்த குடும்பம்'!
- ‘கொரோனா வைரஸ் தான் பர்ஸ்ட்’... ‘இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’... ‘ஐ.நா. கோரிக்கைக்கு தலை அசைத்த நாடு’!
- உலகளவில் 'சரிபாதி' மரணங்கள்... இந்த '3 நாடுகளில்' மட்டும்... கொரோனாவால் '50 ஆயிரம்' பேர் உயிரிழப்பு!
- “ஏய் கொரோனா.. அப்படி ஓரமா போய் விளையாடு!”.. குணமான 99 வயது இரண்டாம் உலகப்போர் வீரர்! வீடியோ!
- 5 'தமிழக' மாவட்டங்கள் உள்பட... 36 மாவட்டங்களில் 'இந்த' பாதிப்பு இருக்கு... 'தீவிர' கண்காணிப்பு தேவை... ஐசிஎம்ஆர் 'எச்சரிக்கை'...