ஆண் நண்பருடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. வீட்டுக்கு திரும்பிய அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இளம் ஜோடிகள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆண் நண்பருடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. வீட்டுக்கு திரும்பிய அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Advertising
>
Advertising

Also Read | கனவுல தொல்லை கொடுத்து வந்த பாம்பு.. பரிகாரம் பண்ண போனவரின் நாக்குலயே கொத்திய பரபரப்பு சம்பவம்..

தமிழகத்தின் உத்திரமேரூரை சேர்ந்தவர் ஜெயராமன். 29 வயதான இவர் எம்.காம் முடித்துவிட்டு சென்னையில் குடியேறியுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் பீர்க்கன்கரணை பகுதியில் வசித்து வந்திருக்கிறார். இவர் கல்லூரியில் படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த யுவராணி என்பவருடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

Chennai Couples Took sad decision after parents object marriage

பி.டெக் பட்டதாரியான யுவராணியும் ஜெயராமனும் கடந்த ஆறு வருடங்களாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பீர்க்கன்கரணையில் உள்ள ஜெயராமனின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் யுவராணி. அப்போது, ஜெயராமனின் தாய் மற்றும் சகோதரர் வேலைக்கு சென்றுவிட்டதால் அவர் மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார்.

இந்நிலையில், வேலைக்கு சென்ற ஜெயராமனின் தாய் மாலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, தனது மகனும் யுவராணியும் உயிரை மாய்த்துக்கொண்டதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனால் அவர் கதறி அழ, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்திருக்கின்றனர். பின்னர் இதுதுகுறித்து பீர்க்கன்கரணை பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெயராமன் மற்றும் யுவராணியின் உடலை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காவல்துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Also Read | ஆன்லைன் காதலனை சந்திக்க 5000 கிமீ பயணித்த பெண்.. ஆசையாய் போனவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

CHENNAI, COUPLES, SAD DECISION, PARENTS, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்