'சென்னையில் இந்த பகுதியில இருக்கீங்களா'... 'மக்களே கவனம்'... 'கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடம்'...அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 800 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் தொற்று பரவினால் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்த தெருவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்படுகிறது.
தற்போது ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா வேகமாகப் பரவுகிறது. இதனால் அவர்களோடு தொடர்பில் உள்ள உறவினர்களுக்கோ, அருகில் உள்ள குடும்பத்தினருக்கோ வைரஸ் பரவி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடந்த ஆண்டு இருந்தது போலக் கட்டுப்பாடு பகுதிகள் முடக்கப்படுவது இல்லை. எவ்வித அறிவிப்புப் பலகையோ, தகரமோ அடித்து வேறுபடுத்திக் காட்டுவது இல்லை.
ஒரே தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டவருக்குத் தொற்று பரவினால் தற்போது மாநகராட்சி மூலம் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு அத்தெரு மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை தேனாம்பேட்டையில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு அதிகமான கட்டுப்பாடு பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை ஒவ்வொரு தெருக்களையும் வார்டு வாரியாக கண்காணித்து வருகிறது.
சென்னையில் 300, 400 கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருந்த நிலையில் தற்போது 826 தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொரோனா எந்த அளவிற்கு வேகமாகப் பரவுகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் குறித்து ஊழியர்கள் கேட்டறிந்து வருகிறார்கள்.
எந்த தெருவில் பாதிப்பு அதிகம் வருகிறது என்பதைக் கண்காணித்து வரும் அதிகாரிகள், அந்த பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை நடத்துகிறார்கள். அதன்படி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குறைந்த அளவிலான பாதிப்பு இருந்தால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீடு வீடா நடக்கப்போகும் சோதனை'... 'தினமும் 50 ஆயிரம் தடுப்பூசி'... சென்னை மாநகராட்சியின் மெகா திட்டம்!
- 'மக்களே உஷார்'...'எல்லாம் நம்ம கையில தான் இருக்கு'... 'இல்ல, அந்த கசப்பு மருந்தை கொடுத்துதான் ஆகணும்'... தமிழக அரசு எச்சரிக்கை!
- 'ஒரு பக்கம் லாக்டவுன் பயம்'... 'ஆனா மக்களே இப்படி இருந்தா எப்படி'?... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்!
- உலகமே கொரோனாவால் நடுங்கிட்டு இருக்கும்போது திடீரென ‘வட கொரியா’ வெளியிட்ட அறிக்கை.. ஆச்சரியத்தில் உலக நாடுகள்..!
- ‘அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி’!.. ‘இந்தியாவில் இருந்து எங்க நாட்டுக்கு வர அனுமதி இல்லை’.. அதிரடியாக அறிவித்த நாடு..!
- RCB பேன்ஸ்-க்கு மேலும் ஒரு 'sad' நியூஸ்...! 'அந்த 2 டீம்-க்கும் பிரச்சனை தான்...' ப்ளான் பண்ண மாதிரி மேட்ச் நடக்குமா...? - கலக்கத்தில் ரசிகர்கள்...!
- 'விமானத்திலிருந்து இறங்கியதும் மொபைலுக்கு வந்த மெசேஜ்'... 'அந்த இடத்திலேயே அலறிய இளம்பெண்'... 'ஓடி வந்த அதிகாரிகள்'... நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்!
- ‘வேகமாக பரவும் கொரோனா 2-வது அலை’!.. ‘அடுத்த 4 வாரம் மிகவும் நெருக்கடியானதாக இருக்கும்’.. மத்திய சுகாதாரத்துறை ‘முக்கிய’ தகவல்..!
- 'திடீரென வாக்குச்சாவடியில் தொற்றிய பரபரப்பு'...'வாக்கு சாவடிக்குள் வந்த ஆம்புலன்ஸ்'... 'பிபிஇ கிட் உடையணிந்து இறங்கிய 'கனிமொழி'!
- 'போற போக்க பார்த்தா... வட்டிக்கு வாங்கி தான் ஐபிஎல் நடத்தணும் போலயே'!.. இது சரிபட்டு வராது!.. ஐபிஎல் நல்லா நடக்கணும்னா... மொதல்ல 'இத' பண்ணுங்க!!