கொரோனா 'அறிகுறி' இருக்குறவங்க 'இந்த மாதிரி' படுத்து 'ரெஸ்ட்' எடுக்கணும்...! அதிகபட்சமா 'இவ்வளவு' நேரம் வரைக்கும் 'அப்படி' படுக்கலாம்...! - சென்னை மாநகராட்சி அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா அறிகுறி இருக்கும் நோயாளிகள் செய்யவேண்டிய நிலைகளை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஊடரங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி, கொரோனா அறிகுறி இருப்பவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை வெளியிட்டுள்ளது.

அதில், 'கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் கடின உடல் உழைப்பை தவிர்த்து வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதோடு தினமும் 2 மணி, 4 மணி நேரம் இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் டாக்டர்கள் பரிந்துரைப்படி ivermectin, Azithromycin, ranitidine மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

ivermectin மாத்திரையை (12 மி.கி. ஒரு முறை) 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.3 நாள் அஜித்ரோமைசின் மாத்திரை (500 மி.கி.), 5 நாள் வைட்டமின் சி (500 மி.கி.) உட்கொள்ளுங்கள்.

5 நாள் ஜின்க் (50 மி.கி.)5 நாள்  ranitidine மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.பாரசிட்டமால் 500 மிகி மாத்திரைகளை ஒரு நாளைக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும்.

இப்போதைய காலசூழல் கோடை என்பதால் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் போதிய நீர்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட மருத்துவ அணுகுமுறைகளை பின்பற்றியும் தொடர்ச்சியான காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும்.

கொரோனா தொடர்பான உதவிகளை பெற, 044 25619263, 25384520, 46122300 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்' என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்