3 மாசத்துக்கு முன்னாடி... சென்னையில கொரோனா நிறைய இருக்குனு... அலறியடிச்சு சொந்த ஊருக்கு ஓடினாங்க!.. இப்ப சென்னை எப்படி இருக்கு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தினசரி கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை குறைந்து வருவதால், நோய் கட்டுப்பாடு பகுதிகளையும் 13 ஆக சென்னை மாநகராட்சி குறைத்துள்ளது.
சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கூட, அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வந்தது. தற்போது, ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
இதனால், சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. 200க்கும் மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து நேற்று (ஆகஸ்ட் 13) அன்று 26 ஆக குறைந்தது.
இன்று, தற்போது மேலும் குறைந்து 13 ஆக உள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதிகள் 7 மண்டலங்களில் மட்டுமே உள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 8 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை எனும் நிலை உருவாகி உள்ளது.
அதிகபட்சமாக அண்ணாநகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தலா 3 இடங்களும், கோடம்பாக்கம், அம்பத்தூர் மண்டலங்களில் தலா 2 இடங்களும் உள்ளன. குறைந்த பட்சமாக வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் தலா 1 இடம் மட்டுமே உள்ளன.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர் ஆகிய 8 மண்டலங்களில் ஒரு கட்டுப்பாட்டு பகுதிகள் கூட இல்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... சென்னையில் மீண்டும் வேகமெடுக்கிறதா?.. முழு விவரம் உள்ளே!
- 'வாட்ஸ் அப்' திறக்கவே முடியல!.. அவ்ளோ ஆபாச வீடியோக்கள்!'.. 'இந்த முறை Block பண்ணல... ஆசையா ஒரு Reply வந்துச்சு'!.. சென்னைப் பெண் தரமான சம்பவம்!
- 'உச்சத்தில்' இருந்து கட்டுக்குள் வந்த கொரோனா... எந்தெந்த மாவட்டங்கள்னு பாருங்க!
- “லவ் பண்ணிட்டு, இப்படி பண்ணிட்டா!”.. காதல் முறிந்த விரக்தியில் பேஸ்புக்கில் இன்ஜீனியர் பார்த்த வேலை!.. 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பறந்த ஆபாச போன் அழைப்புகள்!
- அனைவருக்கும் கொரோனா 'தடுப்பூசி' இலவசம்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு!
- ‘மகாபிரபு கொரோனா.. நீங்க இதுலயும் கைவெச்சுட்டீங்களா?’.. ‘தலைமுடிக்கும் ஆப்பு?’.. ‘மற்றுமொரு’ அதிர்ச்சி தரும் ஆய்வு!
- 'உங்க தடுப்பூசியை நாங்க தயாரிக்கிறோம்...' 'WHO ஒப்புதல்-லாம் முக்கியம் இல்லன்னு...' - முதல் ஆளா ரஷ்யாவிடம் டீல் பேசிய நாடு...!
- 'அடிக்கு மேல் அடி... மரண அடி!.. ஆயிரம் கோடிகளில் வருவாய் இழப்பு'!.. பிரபல ஐடி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவால்... கலங்கும் ஊழியர்கள்!
- 'ஒரேயொரு பெண்ணுக்கு வந்த பாசிட்டிவ் முடிவால்'... 'முதல்முதலாக லாக்டவுனை அறிவித்துள்ள நாடு!'...
- கொரோனா ஒழிப்பில்... சிறந்த மருத்துவ கட்டமைப்பின் மூலம்... சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழகம்!