'சென்னை மக்களுக்கு நம்பிக்கை'... 'ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு இருக்காது'... மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மாநகராட்சி எடுத்துள்ள தொடர்ச்சியான சில நடவடிக்கைகளும் வசதிகளும், வரும் நாட்களில் கொரோனவை குறைக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவதை அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. குறிப்பாகச் சென்னையில் பாதிப்பு அதிதீவிரமாக இருக்கிறது. தீவிர பாதிப்பினை தொடர்ந்து, மாநகரத்தில் படுக்கை வசதி பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. அவற்றைத் தவிர்க்க, தன்னார்வலர்கள் பலரும் ஆட்டோக்களை ஆம்புலன்ஸாக மாற்றுவது, வீட்டிலேயே சிகிச்சை எடுப்பது போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நேற்று முன்தினம் ஒரு புது முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார். அதன்படி, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாதோர், ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டு அங்கேயே ஆக்சிஜன் தரப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ்கள் என்பது சாதாரண வாகனங்கள் தான். பேரிடர் காலமென்பதால், இந்த சேவையைத் தற்காலிகமாகத் தொடங்க உத்தரவிட்டுள்ளார் ககன்தீப் சிங்.

இவரின் ஆணைக்கிணங்க, சென்னையில், 250 கார் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார்படுத்தப்பட்டு, அதன்மூலம் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா அறிகுறி தீவிரமானால் மட்டுமே மருத்துவமனைக்கு வாருங்கள் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் நோய் தீவிரமாகி மருத்துவமனைக்குச் செல்லலாம் என நினைக்கும்போது, ஆம்புலன்ஸ் கிடைப்பதில்லை.

இதனால் மூச்சுத்திணறல் ஏற்படுவது - ஆக்சிஜன் பற்றாக்குறை தீவிரமாவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவையே இறப்பு அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது. இப்படியான சிக்கல்களையெல்லாம், இந்த அவசர ஊர்திகள் தடுக்கும் என நம்பப்படுகிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்கின் இந்த பேரிடர் கால முயற்சிக்கு, இந்திய மருத்துவ கழகத்தின் ஆராய்ச்சியாளர் பிரதீப் கவுர், ட்விட்டர் வழியாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த துரிதமான நடவடிக்கை மூலம், ஆம்புலன்ஸ் சேவையின்மீது வைக்கப்படும் சுமை ஓரளவு குறையும் என அவர் நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கைகள், சுமார் 500 பேருக்கு போதுமான வசதிகளை தற்போதைக்கு கொண்டிருப்பதால், அதன்மூலமாகவும் சென்னையில் படுக்கை வசதி தேவைப்படும் பெரும்பாலானோர் பலனடைந்துள்ளனர்.

இதற்கிடையே சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எடுத்துள்ள இந்த முயற்சிகள் வரும் நாட்களில் சென்னையில் கொரோனவை எதிர்கொள்வதில் புதிய நம்பிக்கையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்