'பாஸ், சென்னை'னா என்னன்னு கேட்டா இத சொல்லுங்க'... 'குஜராத் சிறுமிக்கு சர்ப்ரைஸ்'... ஆனந்த கண்ணீர் வடித்த குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு காரணமாகக் காப்பகத்தில் தங்கியுள்ள குஜராத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு, சென்னை மாநகராட்சி கொடுத்துள்ள சர்ப்ரைஸ், பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர், ஆன்மீக சுற்றுலாவிற்காகக் கடந்த மார்ச் 21 அன்று ரயில் மூலம் சென்னை சென்ட்ரலில் வந்திறங்கினார்கள். அதில் 11 வயது சிறுமி ஷிருஷ்டியும் ஒருவர். இந்த சூழ்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர்களால் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட சென்னை மாநகராட்சி, காப்பகங்களில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள காப்பகத்தில், ஷிருஷ்டியின் குடும்பத்தினர் உட்பட 74 பேர் தங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஷிருஷ்டிக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அதனைக் கொண்டாட முடியவில்லையே எனச் சோகத்தில் இருந்துள்ளார். வருடந்தோறும் நண்பர்கள், மற்றும் சொந்தங்களோடு பிறந்த நாளை கொண்டாடும் ஷிருஷ்டி, இந்த வருடம் அது நடக்காமல் போனதால் அவளை அவரது குடும்பத்தினர் ஆறுதல் படுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் ஷிருஷ்டியின் பிறந்தநாளைக் கேள்விப்பட்டு உடனடியாக கேக் ஆர்டர் செய்த மாநகராட்சி அதிகாரிகள், காப்பகத்தில் தங்கியிருந்த ஷிருஷ்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். தனக்காக கேக் வாங்கி கொடுத்த அதிகாரிக்கு முதல் கேக்கை கொடுத்து பதில் நன்றி செய்தார் ஷிருஷ்டி. சோகத்திலிருந்த சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, அவரின் பிறந்த நாளை கொண்டாடிய சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சொந்தமாக்கி கொள்ள முயற்சி செய்கிறது’... ‘சீனாவுக்கு பகிரங்கமாக’... ‘எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா’!
- 'ஊரடங்கால் சிக்கித் தவிக்கும்'... 'வெளிமாநில தொழிலாளர்களுக்காக'... 'மத்திய அரசின் புதிய திட்டம்'!
- 'கொரோனா'வுக்கு எதிராக... பல்நோக்கு தடுப்பூசியை 'கையில்' எடுத்த இந்தியா... '6 வாரங்களில்' முடிவு தெரிந்து விடும்!
- நாளை முதல் எவை இயங்கும்? எவை இயங்காது?... மத்திய அரசு அறிவிப்பு!
- ‘கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர்’... 'ஆறுதல் அடையும் நகரம்’... ‘எனினும் எச்சரிக்கும் ஆளுநர்’!
- 'கொரோனா பரவலை தடுக்க'... ‘கோயிலில் சாமி முன்பு’... ‘இளைஞர் செய்த உறைய வைக்கும் காரியம்’... ‘அதிர்ந்துப்போன கோயில் அர்ச்சகர்’!
- 'இந்த' டைம்க்கு மேல 'கோயம்பேடு' மார்க்கெட் வந்தா... 'பைக்கை' பறிமுதல் பண்ணிருவோம்!
- ‘கொரோனா வைரஸ்’... ‘இப்படித்தான் உருவாக்கப்பட்டது’... ‘நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்’!
- "எல்லாம் ஷூட்டிங்ல பட்டது.. ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கு!".. கேப்டனுக்கு கட்டிங், ஷேவிங் செஞ்சு டை அடித்துவிடும் பிரேமலதா!
- '10-ஆம் வகுப்பு மாணவர் உட்பட மேலும் 105 பேருக்கு கொரோனா!'.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு!