"ஆஹா... 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடித்தது யோகம்!".. இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய சென்னை மாநகராட்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மாநகராட்சி சார்பில் 10-ஆம் வகுப்புக்கு போகும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை எடுப்பதற்காக போன்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

தற்போது 9-ஆம் வகுப்பு முடித்து 10-ஆம் வகுப்புக்கு செல்லும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 5 ஆயிரம் பேருக்கு,  ‘ரெட்மி நோட் 5’ என்கிற ஆண்ட்ராய்டு மொபைல் போன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 11-ஆம் வகுப்பு முடித்து, 12-ஆம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் ஆண்ட்ராய்டு போன் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக இப்படி ஆண்டிராய்டு வழங்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை, ஜூம் செயலி வழியாக பாடங்களை நடத்தும் வகையில் இந்த திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்