சென்னை மக்களுக்கு தித்திப்பான செய்தி!.. செல்போன் எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும்!.. மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மக்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை பகிர்தல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீரின் அளவை கண்டறிதல் போன்ற பணிகளை ஒருங்கிணைக்க இந்த ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து OTP மூலம் 30 நிமிடங்களுக்கு இலவசமாக  Wi-Fi வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரை, அசோக் பில்லர், நடேசன் பூங்கா, தி.நகர் உள்ளிட்ட மாநகரின் 46 பகுதிகளில் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கம்பங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து, சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்