‘சென்னைக்கு குட் நியூஸ்’!.. 28 நாளா பாதிப்பில்லாத 40 பகுதிகளில் கட்டுப்பாடு ‘தளர்வு’.. உங்க ஏரியா இருக்கான்னு ‘செக்’ பண்ணிக்கோங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 40 பகுதிகள் கட்டுப்படுத்த பிரிவில் இருந்து விடுவிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில தளர்வுகளை மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்கள் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 3,550 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சென்னையில் மட்டுமே 2644 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 358 பேர் குணமடைந்துள்ளனர். 23 பேர் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். சென்னையை பொருத்தவரை இராயபுரம் (422), திரு.வி.க (448) மற்றும் கோடம்பாக்கம் (461) ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனை அடுத்து 40 பகுதிகளின் பட்டியலை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்