'தனிமைப்படுத்தப்பட்டவங்க எந்த ஏரியால இருக்காங்கனு தெரிஞ்சுக்கணுமா? ... சென்னை மாநகராட்சியின் சூப்பர் முயற்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் மூலம் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கப் புதிய மொபைல் செயலி வெளியிடப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் விழிப்புணர்வு இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த செயலி மூலம் சென்னை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள லொக்கேஷனை டிராக் செய்ய முடியும். சென்னை மாநகராட்சியில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் இந்த செயலியை பதிவேற்றம் செய்து தங்கள் வீட்டின் புகைப்படம் மற்றும் லொக்கேஷன் ஆகியவற்றை அனுப்பலாம். இப்படி அனுப்புகையில் ஒரே பகுதியில் அதிகம் பேர் அறிகுறிகளுடன் இருப்பது தெரிந்தால் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போல சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்காமல் கூட்டம் கூடினால் அதை உடனடியாக புகைப்படம் எடுத்து அந்த செயலியில் பதிவிடலாம். அதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த மொபைல் செயலி இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தற்போது வரை, சென்னையில் மட்டும் சுமார் 21,000 தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

CHENNAI CORPORATION, ISOLATION, LOCKDOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்