'லம்போர்கினி காரில் ரஜினிகாந்த்'... 'கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் வாங்கினாரா'?... மாநகராட்சி ஆணையர் அதிரடி பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்றுச் சென்றாரா? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பதிலளித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் லம்போர்கினி கார் ஒன்றை ஓட்டிச் செல்லும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியானது. இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், ரஜினிகாந்த் எங்கே சென்றார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இதனிடையே கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ரஜினிகாந்த் ஓய்வுக்காகச் சென்றுள்ளார் என்றும் அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் உடன் சென்ற தகவல் வெளியானது.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு ரஜினி எப்படிச் சென்றார், முறையான அனுமதி பெற்றுத் தான் சென்றாரா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதிலளித்துள்ளார். ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்றுச் சென்றாரா? என்பது குறித்தும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும், எனக் கூறியுள்ளார்.

மேலும் சென்னைக்கு வர யாரேனும் விருப்பப்பட்டால் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் 5 லட்சம் பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு விரைவில் சோதனை நடத்தி முடிக்கப்படும், என பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்