‘பீனிக்ஸ்’ மாலுக்கு போன யாருக்காவது ‘கொரோனா’ பாதிப்பு இருக்கா..?.. சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பீனிக்ஸ் மாலுடன் தொடர்புடைய 3200 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ‘கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னையில் 43 இடங்களில் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 43 இடங்களில் மொத்தம் 9 லட்சம் மக்கள் இருக்கின்றனர். தொடர்ந்து சென்னை முழுவதும் வீடு விடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வில் யாருக்காவது கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அந்த பகுதியில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.
சென்னையில் வீடு விடாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியில் தன்னார்வலர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். 100 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என்ற வகையில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற 3200 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா அறிகுறியுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினர்.. ஈரோட்டில் அதிர்ச்சி..! போலீசார் அதிரடி..!
- 'தாம்பூலத்தட்டு... பட்டுப்புடவை... பாதபூஜை!'... துப்புரவு பணியாளரை மலர் தூவி பூஜித்த தாய்-மகள்!... திகைப்பூட்டும் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'வெளிய பாத்தா பால் கேன்!'.. 'ஆனா உள்ள பாத்தா'... போலீஸாரை 'உறைய' வைத்த 'குடிமகனின்' வைரல் காரியம்!
- 'கொரோனா' தடுப்பூசி சோதனைகளை இவர்களிடம் நடத்த வேண்டும்.... 'வன்மையாகக் கண்டித்த WHO...' 'அனுமதிக்க மாட்டோம் என உறுதி...'
- கொரோனா சிகிச்சைக்கு பயன்படும்... 'Hydroxychloroquine' (ஹைட்ராக்சிகுளோரோகுயின்) மருந்தை... அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவு!
- ‘அவங்களும் மனுஷங்க தானே’!.. ‘மக்கள் மனசாட்சியோட நெனச்சு பாருங்க’.. முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..!
- ஒழுங்கா 'அமெரிக்காவுக்கு' மருந்த அனுப்பிருங்க... இல்லன்னா 'தக்க பதிலடி' கொடுக்கப்படும்... 'இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்...'
- 'சிக்கிக் கொண்ட கொரோனா!'... வைரஸின் 'வீக் பாயின்ட்' கண்டுபிடிக்கப்பட்டது!... அமெரிக்கா ஆய்வாளர்கள் அறிவிப்பு!
- மும்பை 'சிவப்பு விளக்கு' பகுதி 'பாலியல்' தொழிலாளர்களுக்கு... 'ஊரடங்கு உத்தரவால்' ஏற்பட்ட 'பரிதாப நிலை...' தனியார் 'தொண்டு நிறுவனத்தால்' பிழைத்திருக்கும் 'சோகம்...'
- 'காசு போனா திரும்ப வரும், உயிர் போனா'?...'மோடிஜி இத பண்ணுங்க'... சந்திரசேகர ராவ் அதிரடி!