வேகம் எடுக்கும் கொரோனா.. நெருக்கடியில் சென்னை.. தனிமைப்படுத்தப்படும் தெருக்கள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வரும் நிலையில், சென்னையின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளை இந்த உலகமே மறக்க முடியாத அளவுக்கு செய்து விட்டது கொரோனா தொற்று. சீனா தொடங்கி, அனைத்து உலக நாடுகளையும் ஒரு பாடு படுத்திய கொரோனா தொற்று, லட்சக்கணக்கான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது ஒமைக்ரான் என்னும் உருமாறிய தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

நான் இனிமேல் அம்மா கிடையாது செல்லம், 'அப்பா' சரியா? 2 குழந்தைகள் பெற்ற பிறகு ஆணாக மாறிய பெண்

வேகம் எடுக்கும் தொற்று

இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. புத்தாண்டும் வருவதையடுத்து, மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், டெல்லி மாநிலத்தில், உடனடி ஊரடங்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டுக்கு தடை

அதே போல, தமிழகத்திலும், இதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு, புத்தாண்டின் போது, தனியார் விடுதிகள் மற்றும் கடற்கரைக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்திலும் நாளுக்கு நாள், கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பல இடங்களில், அதிகம் பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஓடுங்க ஓடுங்க... 'அது' நம்மல நோக்கித்தான் வருது... சுற்றுலா பயணிகள் கண் முன்னே ஷாக்!

தனிமைப்படுத்தப்படும் தெருக்கள்

இதன் காரணமாக, முன்பு போல மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஒரே தெருவில், 3 பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானால், அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்படும். அப்படி சென்னையின் அசோக் நகர் பகுதியில், ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த தெருவைச் சுற்றி, தடுப்புகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தடுப்பு

அதிக மக்கள் இருக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில், கொரோனா தொற்றின் அலை உருவான சமயத்தில், இதே போன்று தடுப்புகள் அமைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமீப காலமாக, இந்த மாதிரி பகுதிகள் எங்கும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது, மீண்டும் கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் காரணமாக, சென்னையின் பல தெருக்கள், தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனைக்  கட்டுப்படுத்த அரசு தரப்பில் அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CHENNAI, CORONA, SPREAD, CORONAVIRUS, கொரோனா, தொற்று, புத்தாண்டுக்கு தடை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்