'சாத்தான்குளம்' சம்பவம் பத்தி 'ஃபேஸ்புக்' பதிவு... 'காவலர்' அதிரடி 'சஸ்பெண்ட்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தை அதிரவைத்த சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக  சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஆயுத படை காவலர் சதீஷை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததன் பெயரில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு எதிராக பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்களும், இந்த சம்பவம் தொடர்பாக தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை பெருநகர் காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவத்தை குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து அவரின் கருத்திற்கு பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தனது  ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ ஹேக் செய்ததாக சதிஷ் முத்து தெரிவித்தார். தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பொறுப்பற்ற முறையில், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதற்காக காவலர் சதீஷ் முத்துவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். காவல் ஆணையர் விஸ்வநாதன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்