லோன் அப்ளிகேஷன்கள் மூலம் வரும் ஆபத்து.. சென்னை காவல் ஆணையர் கொடுத்த முக்கிய அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் மூலமாக கடன் பெறும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தவேண்டாம் என சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
எச்சரிக்கை
சமீப காலங்களில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் அப்ளிகேஷன்கள் அதிகரித்துவிட்டன. குறைவான சிபில் ஸ்கோர் இருந்தாலே போதுமானது எனக்கூறி வலைவிரிக்கும் இந்த கும்பல் கொஞ்ச நாளிலேயே தங்களது வேலைகளை காட்டத்துவங்கிவிடுவர். வாங்கிய பணத்தை விட அதிகமான பணத்தை கட்டும்படி நச்சரிக்கும் இந்த கும்பல், ஒருகட்டத்தில் கடன் வாங்கியவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டவும் செய்வதாக காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதேபோல, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா பகுதிகளில் ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த 4 பேர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் கடன் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் பணத்தை இவர்கள் சுருட்டியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி பேசிய சென்னை காவல்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால்," லோன் அப்ளிகேஷன்கள் மூலமாக கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
லோன் ஆப் வேண்டாம்
மேலும், இதுபற்றி பேசிய அவர் ஆன்லைன் லோன் பெறும் அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதுவரையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தீபக்குமார் பாண்டே (26), ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்தர் தன்வர்(24) இவரது சகோதரி நிஷா(22), டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா (21) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து இந்த வேலைகளை செய்தது தெரிய வந்திருப்பதாகவும் ஷங்கர் ஜிவால் கூறினார்.
இந்த மோசடி வேலையில் 50 பேர்கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பதாகவும் மீதியுள்ள நபர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கி கணக்குகளை முடக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், மக்கள் இதுபோன்ற அப்ளிகேஷன்களை உபயோகிப்பதை தவிர்க்கும்படி வலியுறுத்தினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்தடுத்து நடந்த 3 பயங்கரம்... குறிப்பா அவங்க மட்டும் தான் டார்கெட்.. மொத்த மாநிலத்தையும் நடுங்க வைக்கும் 'Stone Man'.. முழுவிபரம்..!
- "12 வருஷம் ஆகியும் புடிக்க முடியல".. திக்கித் திணறும் போலீஸ்.. "துப்பு குடுத்தா 50,000 டாலராம்".. தீவிரமாக இறங்கிய அதிகாரிகள்
- "எதுக்கு பைக்கை திருடுன?".. போலீசாரின் கேள்விக்கு இளைஞர் சொன்ன பதில்.. ஒரு நிமிஷம் எல்லாருமே ஷாக் ஆகிட்டாங்க..!
- "உங்களைத்தான் நம்பி இருக்கேன்".. தனியாளாக காவல்நிலையத்துக்கு போன சிறுவன்.. புகாரை கேட்டு அதிர்ந்துபோன போலீசார்..!
- உயிரிழந்து கிடந்த 'பெண்'.. 34 வருசமா கண்டுபிடிக்க முடியாம திணறிய போலீஸ்.. "மர்ம நபர் எழுதிய Letter மூலமா தெரியவந்த உண்மை"..
- Friend Request அனுப்புன இளம்பெண்.. குஷியான நபருக்கு கொஞ்ச நாள்ல பெண் கொடுத்த அதிர்ச்சி.. நொந்துபோய்ட்டாரு மனுஷன்..!
- பக்காவா பிளான் போட்டு நகைக்கடையில் கைவரிசை காட்டிய திருடன்.. கடைசில பிளாஸ்டிக் பை மூலமாக வந்த டிவிஸ்ட்.. ஸ்பாட்டுக்கு போன போலீசுக்கு வந்த ஷாக்..!
- நடிகை மரணமடைந்த விவகாரம்.. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீஸ்.. வெளிச்சத்துக்கு வந்த மர்மம்..!
- காதல் திருமணம் செஞ்ச மகள்.. கல்யாணத்துக்கு போகாத அம்மா.. கோவத்துல கணவர் செஞ்ச காரியத்தால் பதறிப்போன உறவினர்கள்..!
- குலைச்சுக்கிட்டே இருந்த நாய்.. பூட்டிய வீட்டுக்குள்ள இருந்து வந்த துர்நாற்றம்.. அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள்.. திருப்பூரில் திக்.. திக்..