‘ஐ மிஸ் யூ’... ‘இன்னும் கொஞ்சம் நேரத்துல’... நண்பனைப் ‘பதறவைத்த’ சென்னைப் பெண்... ‘ஓடிச்சென்று’ பார்ப்பதற்குள் நேர்ந்த ‘துயரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் உடல் பருமன் காரணமாகவும், தொடர்ந்து ஒரே வகுப்பில் படித்து வந்ததாலும் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த தம்பதி கணேஷ் - காயத்ரி. இவர்களுடைய மகள் பூஜா (20) தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாமாண்டு படித்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் நண்பருக்கு போன் செய்த பூஜா, “இன்னும் கொஞ்சம் நேரத்தில் நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். ஐ மிஸ் யூ டா” எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அதைக்கேட்டு பதறிப்போன பூஜாவின் நண்பர் உடனடியாக அவருடையை செல்போனுக்கு மீண்டும் போன் செய்ய சுவிட்ச் ஆஃப் என பதில் வந்துள்ளது. பின்னர் அவர் பூஜாவின் தாய்க்கு போன் செய்ய அவரையும் தொடர்புகொள்ள முடியாமல் போயுள்ளது. இதையடுத்து அவசர அவசரமாக தாம்பரத்திலிருந்து கிளம்பிய அவர் குன்றத்தூரில் உள்ள பூஜாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது பூஜா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ந்துபோன அவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அங்கு சென்ற போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பிறகான விசாரணையில், டான்ஸ் மீது அதிக ஆர்வமுள்ள பூஜா உடல் பருமன் காரணமாக டான்ஸ் ஆட முடியவில்லை என மன உளைச்சலில் இருந்துவந்தது தெரியவந்துள்ளது. மேலும் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டிய அவர் சில காரணங்களால் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் பொண்ண அவன் 'பைக்'ல உக்கார சொல்லி டார்ச்சர் பண்றான்!'... மாணவியிடம் தகராறு செய்யும் வாலிபர்!... 'மகள்' எடுத்த அதிரடி முடிவால்... விரக்தியில் 'தந்தை'!
- ‘கழிவறையில் செல்போன் கேமரா!’ .. ஐஐடி சென்னை கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்த உதவிப் பேராசிரியர்? நடுங்க வைத்த சம்பவம்!
- வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து கல்லூரி மாணவர் செய்த விபரீத செயல்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- ‘இதுதான்’ என் வாழ்க்கையோட ‘லட்சியமே’... ‘சென்னை’ பெண்ணிடம் வேலையைக் காட்டிய ‘பட்டதாரி’ இளைஞர்... விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...
- 'செல்போன் ஹெட்செட்'டில் பாடல் கேட்டுக் கொண்டு... தண்டவாளத்தை கடக்க முயன்ற 'மாணவர்'... அதிவேகத்தில் வந்த 'ரயில்'... உடல் சிதறி... பதைபதைக்க வைக்கும் கோரம்!
- VIDEO: ‘தூங்குவதுபோல் நடித்து’.. மர்மநபர் செய்த அதிர்ச்சி காரியம்.. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரபரப்பு..!
- “பயமா இருக்கு அண்ணா”... ‘தம்பிக்கு ஆறுதல் கூறிவிட்டு’... ‘திரும்பி வந்து பார்த்தபோது’... 'நடந்தேறிய விபரீதம்'!
- ‘காதலர்’ தினத்தன்று நடக்கவிருந்த ‘திருமணம்’... ‘வாட்ஸ்அப்பில்’ வந்த ஒரு மெசேஜால்... முடிவுக்கு வந்த ‘10 ஆண்டு’ காதல்...
- கஞ்சா போதையில் 'கிளியோபாட்ராவாகத்' தெரிந்த '80 வயது' பாட்டி... 'அத்துமீற' முயன்ற இளைஞரால் 'பரபரப்பு'...
- 'பொண்ணு நல்லா இல்ல'... 'காதலர் செய்த காரியத்தால்'... 'பரிதவித்த இளம் பெண்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'!