‘புள்ள பெத்துக்கவே 10 மாசம் ஆகுது’.. 20 நாள் வீட்ல இருக்க முடியாதா?.. ‘எங்களுக்காக இத மட்டும் பண்ணுங்க’.. தூய்மை பணியாளர்கள் உருக்கமான வேண்டுகோள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என சென்னை தூய்மை பணியாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தை பொருத்தவரை மதுரையை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் விழிப்புணர்பு இல்லாமல் வெளியே சுற்றித் திரியும் மக்கள் குறித்து சென்னை சுகாதார பணியாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். அதில், ‘அவரவர் உயிர் மீது அவர்கள்தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மால் கொரோனா விழிப்புணர்வு குறித்து சொல்லதான் முடியும். எங்களை பொருத்தவரை நாங்கள் கட்டாயம் வேலைக்கு வந்துதான் ஆக வேண்டும். வேலைக்கு வந்தால்தான் எங்களால் உணவு உண்ண முடியும்.
ஒருவேளை எங்களுக்கும் கொரோனா விதிமுறைகள் விதிக்கப்பட்டால் நாங்களும் வீட்டில்தான் இருப்போம். ஆனால் சிலர் இதை விடுமுறை போல நினைத்து நடந்துகொண்டு இருக்கின்றனர். அரசு பொதுமக்களை காக்க போராடி வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு நல்லது.
பிள்ளை பெற்றுக்கொள்ளவே பத்து மாதங்கள் ஆகின்றன. இவர்களால் 20 நாட்கள் வீட்டில் இருக்க முடியாதா? பொதுமக்கள் நிச்சயம் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து, அவர்களது உயிரை காத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்காக நாங்கள் வீதியில் இறங்கி வேலை செய்து வருகிறோம். எங்களுக்காக நீங்கள் வீட்டில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எந்தெந்த’ பொருட்களை ஹோம் ‘டெலிவரி’ செய்யலாம்?... ‘எதையெல்லாம்’ டெலிவரி செய்யத் ‘தடை’... ‘சென்னை’ மாநகராட்சி ‘அறிவிப்பு’...
- ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே திரிந்த மக்கள்.. தண்ணீரை பீய்ச்சி விரட்டிய அதிகாரிகள்..!
- 'சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்...' 'அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக...' தமிழக அரசு அறிவிப்பு...!
- வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் வந்து ... தனிமையில் இருக்காமல் சுற்றி திரிந்த நபர் ... நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
- 'பெட் ரூமில் தூங்கி கொண்டிருந்த கணவன்'... 'திடீரென நர்ஸ் செய்த விபரீதம்'... சென்னையில் நடந்த கோரம்!
- ‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா?... ‘விவரங்கள்’ உள்ளே...
- "அடங்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு தான்..." "வேற வழியில்லை..." "பெட்ரோல் பங்கையும் மூடிருவோம்..." 'எச்சரிக்கை' விடுத்த 'முதலமைச்சர்' யார் 'தெரியுமா?...'
- ‘ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம்!’.. ‘காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால்’ பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு!
- 'அண்ணே, இந்த ஒன் மீட்டர் டிஸ்டன்ஸ்' ... அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு ... பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி சென்ற மக்கள்!
- ‘நான் எந்த தப்பும் பண்ணல’.. ‘என் மேல் வீண்பழி போடுறாங்க’.. சென்னை வாலிபர் எடுத்த முடிவு.. நொறுங்கிப்போன குடும்பம்..!