‘நாங்களும் மனுசங்கதானே’!.. ‘இரவுபகலா சலிக்காம வேலை செய்றோம்’.. ‘எங்களையும் ஒரு 10 சதவீதமாவது..!’ சென்னை தூய்மை பணியாளர் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மருத்துவர்கள், செவிலியர்களைப் போன்று தங்களையும் மதிக்க வேண்டும் என தூய்மை பணியாளர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தூய்மை பணியாளர் ஒருவர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நெறைய பேர் ஸ்டேடஸ்ல காவல்துறை, மருத்துவர்களை பாராட்டு போடுகிறீர்கள். நானும் அவர்களை 100 சதவீதம் பாராட்டுகிறேன். அதேநேரத்தில் எங்களை போன்ற துப்பரவு பணியாளர்களையும் 10 சதவீதமாவது பாராட்டுங்கள். எங்களுக்கும் லீவ் கிடையாது. வர்தா புயல், டெங்கு, காலரா, மலேரியா மற்றும் தேர்தல் சமயங்களில் இரவுபகலாக சலிக்காமல் வேலை செய்கிறோம்.

நாங்க உங்ககிட்ட கேட்பதெல்லாம் காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்டுவதைப்போல் எங்களையும் பாராட்டுங்களேன் என்றுதான். எங்களுக்கு அது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும். ஊரடங்கு உத்தரவு பிறப்பத்தில் இருந்து இரவு 1.30 மணிவரை வேலை செய்கிறோம். மக்களுக்கு நல்லது என்பதால் நாங்கள் அதை செய்கிறோம். அதேவேளையில் நாங்களும் மக்கள்தான். எங்களையும் கொஞ்சம் பாராட்டி இருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். மனசு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. தவறுதலாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் ஆனந்தன் என்பவர், துப்புரவு பணியாளர் தனது வீட்டின்முன் உள்ள குப்பைகளை எடுக்காததற்காக தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அடுத்த அந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

CORONA, CORONAVIRUS, CHENNAI, CLEANINGSATFF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்