'தன் பாலின' உறவுக்கு அழைத்து' ...'பாலுறுப்பு அறுப்பு ' ... 'சென்னை'யை அதிரவைத்த 'சைக்கோ '!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன் பாலின உறவுக்கு அழைத்து இரண்டு பேரின் பாலுறுப்பை அறுத்த நபரின், நடமாட்டம் அடங்கிய சிசிடிவி பதிவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
சென்னை ரெட்டேரி பகுதியில் பாலத்தின் அடியில் படுத்திருந்த அஸதுல்லா என்பவரது பாலுறுப்பு துண்டிக்கப்பட்டதாக கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் தானே தனது உறுப்பை அறுத்து கொண்டதாக தெரிவித்தார்.சில நாட்களில் சிகிச்சை பலனின்றி இறந்தும் போனார்.இதனிடையே அதே இடத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி நாராயணப் பெருமாள் என்பவரது உறுப்பு துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஒரே இடத்தில்,ஒரே விதமாக நடந்திருக்கும் சம்பவம் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து நாராயண பெருமாளிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானது. அவர் அளித்த வாக்குமூலத்தில் 'தன் பாலின உறவில் ஈடுபட்டபோது மது போதையில் இருந்த அந்த நபர்,தனது உறுப்பை அறுத்து விட்டதாக' தெரிவித்துள்ளார். இதையடுத்து அஸதுல்லாவிற்கும் இது போன்று தான் நடந்திருக்க வேண்டும் என காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர்.
தொடர்ந்து நாராயண பெருமாளிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த போது, நாராயண பெருமாள் கூறிய அடையாளத்துடன்,உறுப்பை அறுத்த சைக்கோ நபர் நடமாடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இதையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர்.இதனிடையே அந்த சைக்கோ நபர் முனியசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குழம்பித் தவித்த போலீஸ்.. அடையாளம் காட்டிய வாக்கு மையும் டாட்டூவும்.. பதறவைக்கும் சம்பவம்!
- 'இப்படியா ஆபாசமா ஆடுறது'...போதையில் 'டி.ஜே டான்ஸ்'...சிக்கிய 'ஐடி' மற்றும் 'கல்லூரி மாணவிகள்'!
- ‘தன் உயிரை பனையம் வைத்து 2 உயிரை காப்பாற்ற 60 அடி கிணற்றில் இறங்கிய காவலர்’.. குவியும் பாராட்டுகள்!
- 'மியூசிக் கேளுங்க சார்.. லைஃப் நல்லாருக்கும்'.. லத்தியை புல்லாங்குழலாக மாத்திய கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ!
- 'பெண்ணை வெறித்தனமாக பெல்ட்டால் அடித்த போலீஸ்..' வீடியோ வைரலாகி அதிகாரிகள்மீது நடவடிக்கை..
- 'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR!
- 'வெறும் ஸ்பேர் பார்ட்ஸ்க்காகதான் சாமி செஞ்சோம்'.. பதற வைக்கும் திருட்டு கும்பல்!
- 'மண்ட பத்திரம்'...' ஹெல்மேட்' போடுங்க பாஸ்...'Life' நல்லா இருக்கும்... வைரலாகும் வீடியோ!
- 'போலீஸாயிட்டேன்.. என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. நெகிழவைத்த மதுவின் சகோதரி!
- 'பெண்ணின் கருப்பைக்குள்'...'பைக்கின் கைப்பிடி துண்டு'...'கொடூர கணவனின்'... அதிர வைக்கும் செயல்!