"நான் சொன்னதுக்காக வந்துருக்கீங்க... ரொம்ப நன்றி..." 'பிரதமர்' குறித்து 'தமிழக' முதல்வர் 'பேச்சு'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று ஒரு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.

சுமார் 10:30 மணியளவில் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், தமிழக பாஜக தலைவர் எல். முருகன், உள்ளிட்ட சிலர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்த பிரதமரை வரவேற்று காலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, தனது அழைப்பை ஏற்று தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், பிரதமர் ஆரம்பித்து வைக்கும் திட்டங்கள், தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். கொரோனா தடுப்பூசியால் இந்தியாவிற்கு உலக அளவில் பாராட்டு கிடைத்து வருவதாகவும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் சிறந்த முறையில் செலுத்தப்பட்டு வருவதாகவும் தனது பேச்சில் முதல்வர் குறிப்பிட்டார்.

அதே போல, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கும், கொரோனா காலத்தில் தமிழக அரசின் பணிகளை பாராட்டியதற்கும் பிரதமருக்கு மீண்டுமொறை தனது நன்றியை தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும், மெட்ரோ ரெயில் திட்டம், நெடுஞ்சாலை திட்டம், கல்லணை கால்வாய் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி, மத்திய அரசு சார்பில் மெட்ரோ ரெயில் உள்ளிட்ட திட்டங்களுக்காக போதுமான நிதி வழங்கப்பட்டகாகவும் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்