சென்னை, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: ‘இந்த பகுதிகளில்’ வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகரும் நிவர் புயல் தமிழகத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே 120 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கவிருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு, வானிலை ஆய்வு மையத்தின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பேரில் எடுத்து வருகிறது.

இதனிடையே24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்பட்டும் பட்சத்தில் முடிச்சூரில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் மக்கள் பாதிகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் அடையாறு கரையோர மக்களுக்கும்,செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியும் இருக்கும் சுற்று வட்டார மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல்கட்டமாக 1,000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட உள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்