அடடா..! ஒரு எழுத்துல உலக சாதனையை பறி கொடுத்த சென்னை சென்ட்ரல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற சாதனையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு எழுத்தில் தவறவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்ற பெயரை சமீபத்தில் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதிக நீளமான பெயராக இருந்ததால் குறும்பாக இணையத்தில் பலரும் கலாய்த்தும் வந்தனர்.

இந்நிலையில் உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற சாதனையை ஒரு எழுத்தில் தவறவிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் நாட்டில் உள்ள ஒரு ரயில் நிலையத்துக்கு 'Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch' என்ற பெயர் வைத்துள்ளனர். இதில் மொத்தம் 58 எழுத்துக்கள் உள்ளன. அதேபோல்  ’Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station’ என்ற பெயரில் 57 எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இதனால் ஒரு எழுத்தில் உலக சாதனையை இழந்துள்ளது.

CHENNAI, RAILWAYSTATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்