கீழே போட்ட எலும்பு துண்டை வைத்து மீண்டும் சூப் வைத்த கடைக்காரர்?.. சிசிடிவி காட்சியால் அதிர்ந்த சென்னை மக்கள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை பகுதியில் அமைந்துள்ள நடைமேடை ஒன்றின் அருகே, சூப்கடை ஒன்றை நபர் ஒருவர் நடத்தி வருகிறார்.

கீழே போட்ட எலும்பு துண்டை வைத்து மீண்டும் சூப் வைத்த கடைக்காரர்?.. சிசிடிவி காட்சியால் அதிர்ந்த சென்னை மக்கள்
Advertising
>
Advertising

கடந்த பல ஆண்டுகளாக இந்த சூப் கடையை அவர் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இங்கு தினந்தோறும் எக்கச்சக்கமான நபர்கள் சூப் குடித்தும் வந்துள்ளனர்.

மாலை நேரத்தில் தொடங்கி இரவு வரை, அந்த நபர் வியாபாரம் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், சிக்கன் பகோடா உள்ளிட்ட சில பொருட்களையும் சூப்புடன் சேர்த்து விற்பனை செய்தும் வந்துள்ளார்.

சிசிடிவி வீடியோ

இந்நிலையில், இந்த கடை தொடர்பான சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி, தற்போது சென்னை மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடை நடத்தி வரும் நபர், வாடிக்கையாளர்கள் சூப் குடித்து விட்டு சென்ற பிறகு, அவர்கள் குடித்து விட்டு போட்டுச் செல்லும், மீதமுள்ள எலும்புத் துண்டுகளை பொறுக்கி, மீண்டும் சூப்பில் போட்டு கலக்குவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

சென்னை மக்கள் அதிர்ச்சி

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது சென்னைவாசிகள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், அந்த சூப் கடையின் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இந்த சிசிடிவி வீடியோ, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

உண்மைத் தன்மை என்ன?

எப்போது வெளியிடப்பட்டது, முழுமையாக என்ன நடந்தது என இந்த வீடியோவில் இருப்பதன் உண்மைத் தன்மை, குறித்த கேள்விகளுக்கான பதில்கள் சரிவர தெரியவராத நிலையில், இந்த வீடியோ மற்றும் மேலும் இதுபோன்ற வேறு கடைகள் சம்மந்தப்பட்ட சில வீடியோக்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

SOUP SHOP, CHENNAI PEOPLE, CHENNAI, CCTV, VIDEO, SHOCK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்