'லாரியில இருந்த கண்ணு படம் தான் க்ளூ...' '4 நாளா அல்லும்பகலும் சோதனை...' 'கடைசியா வந்த லாரியில அதே மாதிரி கண்ணு...' - உச்சக்கட்ட பரபரப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதன் அடிப்படையில் பரங்கிமலை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். இந்த தீவிர விசாரணையில் மகேஷ் என்பவர் கஞ்சாவை மொத்த விற்பனைக்கு வியாபாரம் செய்தது தெரிய வந்துள்ளது.
அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் லாரியில் கஞ்சா கடத்தி தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாகவும், அந்த லாரியின் மீது கண்கள் படம் வரையப்பட்டிருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் செங்குன்றம் சோதனைச் சாவடியில் இரவும் பகலும் என 4 தினங்களாக தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது குறிப்பிட்ட அடையாளங்களுடன் ஐம்பது கருவாடு மூட்டைகளோடு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை சோதனைக்கு உட்படுத்திய போலீசார் லாரியில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள 9 கஞ்சா மூட்டைள் இருந்ததை கண்டறிந்து கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ், முரளி, திண்டுக்கல்லை சேர்ந்த மகுடேஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் 1.50 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு டிரைவர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் கஞ்சா மூட்டைகள் விசாகப்பட்டினம் அருகே உள்ள 'துனி' மலைப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. சிறப்பாக செயல்பட்டு கடத்தல் கும்பலைப் பிடித்த காவல் ஆய்வாளர் ராஜலெட்சுமிக்கு சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பரிசு வழங்கி வெகுவாக பாராட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Watch: ‘மாஸ்க்-அ ஓபன் பண்ணுங்க’.. திறந்து பார்த்து ‘ஷாக்’ ஆன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டை பரபரக்க வைத்த பயணி..!
- வந்தாச்சு 'பயோனிக் கண்'...! பார்வை இல்லாதவர்களோட கவலை போயே போச்சு...' அப்படி என்ன இதுல ஸ்பெஷல்...? - டாக்டர்கள் சாதனை...!
- 'பார்வை இழந்தவர்கள் புதுவாழ்வு பெறட்டும்'!.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' முடிவு!.. வெளியான பரபரப்பு தகவல்!
- '6 பாக்கெட்டுகள்'.. 'அசரவைக்கும் ஐடியா!'.. 'கடத்தல்' தம்பதியின் 'உள்ளாடை' ட்ரிக்!.. ஏர்போர்ட்டில் உறைந்து நின்ற அதிகாரிகள்!
- கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!.. திருவனந்தபுரத்தில் கடத்திய தங்கம்... திருச்சி நகை கடையில் விற்பனை!.. பகீர் பின்னணி!
- ‘கிலோ கணக்கில் தங்கம்... லட்சம் லட்சமா, பணம்!’ - ‘கடத்தல் ராணி’ ஸ்வப்னாவின் பின்னணியில் இருப்பது ‘இவரா?’ - அதிர்ச்சியில் கேரள அரசியல்!
- 'சமூகம் பெரிய இடம் போல'... 'நடுக்கடலில் வீசப்பட்ட 'ரூ.7 கோடி' தங்கம்'... இளைஞர்கள் செய்த ட்விஸ்ட் !
- 'யார் சாமி இவரு?'... 'அயன் சூர்யாவுக்கே டஃப் குடுப்பாரு போலயே!'... 'தங்கம் கடத்த புது ரூட்டு!'... 'ஆடிப்போன அதிகாரிகள்'...
- 'அயன் சூர்யா ஸ்டைலில் கடத்தல்!!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு!'...
- ‘விக்கிற்கு கீழே’.. ‘இப்படி எல்லாம் கூட ஒரு கடத்தலா?’.. ‘வசமாக சிக்கிய இளைஞர்’..