‘இனி இப்டி செய்யமாட்டோம்’... ‘ரூட்டு தல மாணவர்கள்’... வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ரூட்டு தல விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்கள், அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் நன்னடத்தை உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த செவ்வாயன்று பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், அரசுப் பேருந்தில் கத்தியால் தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை முழுவதும் ரூட்டு தல என்ற பெயரில் அராஜகம் செய்து வந்த 90 பேர் அடையாளம் காணப்பட்டனர். மாணவர்களின் அடாவடி செயல்களை நிறுத்த காவல்துறை சார்பில், கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து ரூட்டு தல என்ற பெயரில் அடாவடித்தனம் செய்துவந்த பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, புதுக் கல்லூரியை சேர்ந்த 90 மாணவர்களிடம் குற்றவியல் நடைமுறைகள் சட்டத்தின் படி, இனி எந்த தவறும் செய்யமாட்டோம் என்று போலீசார் பிரமாண பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர். மேலும், அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் நன்னடத்தை  உறுதி மொழியும் ஏற்றனர். அதன்படி இனி குற்றச்செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி வழங்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்வதாக, மாணவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த வீடியோ காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

CHENNAI, ROUTETHALA, THALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்