தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த பெண்.. மருத்துவமனையில் மாப்பிள்ளை வீட்டாருக்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மயங்கி விழுந்ததால், திருமண மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
>
Advertising

சென்னையை அடுத்த பாடி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த பெரியார் நகரைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

மயங்கி விழுந்த மணப்பெண்

தொடர்ந்து, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. மணமக்கள் வீட்டார் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், கிருத்திகாவுக்கு தாலி கட்ட தயாரானார் தினகரன். அப்போது திடீரென மணப்பெண் மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்

இதனால், மாப்பிள்ளை மற்றும் அங்கு கூடியிருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தாலி கட்டும் நேரத்தில் பெண்ணுக்கு இப்படி ஆகியதால் என்ன செய்வதென்று புரியாமலும் தவித்தனர். உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கிருத்திகாவை உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

குழப்பம்

அப்போது, வயிற்று வலி காரணமாக, தான் மயக்கம் அடைந்ததாக மருத்துவர்களிடம் கிருதிக்கா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்களோ உடலில் எந்த பிரச்னையும் இல்லை என கூறினார். இதனால், அவரின் குடும்பத்தினர் மத்தியில் கடும் குழப்பமும், அதிர்ச்சியும் நிலவியுள்ளது.

உண்மை என்ன?

தொடர்ந்து, கிருத்திகாவிடம் மேலும் விசாரித்த போது தான் கல்யாண மேடையில் தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்ததற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த திருமணம் பிடிக்காமல் தான் தாலி கட்டும் நேரத்தில் தான் மயங்கி விழுந்தது போல நடித்ததாகவும் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

புகார் அளித்த மாப்பிள்ளை

இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை தினகரன், போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். திருமணத்திற்காக செலவு செய்த பணத்தை பெண் வீட்டார் திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு, தினகரன் புகாருக்கு ஒப்புதல் அளித்த பெண்ணின் குடும்பத்தினர், பையன் வீட்டில் இருந்து பெண்ணுக்கு போடப்பட்ட 5 சவரன் நகை உள்ளிட்ட சில பொருட்களையும் திருப்பி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தாலி கட்டும் நேரத்தில், மயக்கம் வருவது போல நடித்து அதிர்ச்சிக்குள் ஆக்கிய பெண்ணால், அப்பகுதியில் அதிக பரபரப்பு ஏற்பட்டது.

MARRIAGE, CHENNAI, BRIDE, HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்