'பொங்கல் விடுமுறையை கொண்டாட கடற்கரைக்கு வரும் மக்கள்'... தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பண்டிகைக்கு நெருங்கி வரும் வேளையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினை மக்கள் தங்கள் குடும்பத்தோடு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை காலங்களில் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் லட்சக்கணக்கான அளவில் திரள்வது வழக்கம். இதனையடுத்து பொங்கல் பண்டிகையின் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அண்ணா பூங்கா, சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்கா மற்றும் மாமல்லாத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றைப் பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியா முழுவதும் நாளை முதல் ஆரம்பம்!.. 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகம்!.. ஒரு மருந்தின் விலை என்ன?.. எப்படி கிடைக்கும்?
- 'தமிழகத்தின்' இன்றைய (11-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'ஒருநாளைக்கு 2 ஜிபி டேட்டா!'... ‘தமிழக’ அரசின் ‘அசத்தல்’ அறிவிப்பு! ‘மகிழ்ச்சிப் பொங்கலில்’ கல்லூரி மாணவர்கள்!
- 'தமிழகத்தின்' இன்றைய (09-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- தேதிய அறிவிச்சாச்சு...! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட தொடங்கும் நாள்...' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு...!
- 'புதுச்சேரி கலெக்டருக்கு நச்சு கலந்த குடிநீர் கொடுக்கப் பட்டதா?'.. ‘வாட்ஸ் ஆப்பில் தீயாய் பரவும் கிரண்பேடியின் தகவல்!’.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!
- 'தமிழகத்தின்' இன்றைய (08-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- எங்க நமக்கும் கொரோனா வந்திடுமோ...?! 'காச பார்த்தா உயிர் வாழ முடியாது...' - உச்சக்கட்ட கொரோனா பயத்தில் 'வேற லெவல்' முடிவு எடுத்த நபர்...!
- திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!!