1 ரூபாய்க்கு ‘சானிடைசர்’ பாக்கெட்.. அசத்திய பிரபல நிறுவனம்.. எங்கெல்லாம் கிடைக்கும்..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சானிடைசர்களின் தேவை அதிகரித்துள்ளதால் ஒரு ரூபாய்க்கு சிறிய சானிடைசர் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய கவின்கேர் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சானிடைசர்களின் தேவை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் கவின்கேர் (CavinKare) நிறுவனம் சிறிய பாக்கெட்டுகளில் சானிடைசரை விற்க உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு முன்னரே 50 பைசாவில் Shampoo பாக்கெட்டுகளை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் சிறிய பாக்கெட்டுகளில் Shampoo-ஐ அறிமுகம் செய்தன.
இந்த நிலையில் கொரோன வைரஸ் பாதிப்பு காரணமாக சானிடைசர் தேவை அதிகமாகியுள்ளதால், 1 ரூபாய்க்கு 2 மில்லி அளவில் சானிடைசர் பாக்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கவின்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் Nyle என்ற பெயரில் 90ML, 400ML, 800ML மற்றும் 5L என்ற அளவில் சானிடைசர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு புதிய தயாரிப்பை கொண்டுவர 18 மாதங்கள் ஆகும் என்ற நிலையில், கவின்கேர் சானிடைசர் ஏற்கனவே தயாரித்திருந்ததால் உடனடியாக கொண்டுவர முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Shampoo பாக்கெட்டுகள் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதோ, அதேபோல் இந்த சானிடைசர் பாக்கெட்டுகளும் மளிகை கடைகள், இணையம் மூலம் சாமானிய மக்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அழ கூட முடியலியே'...'வரிசையாக வரும் சவப் பெட்டிகள்'...நொறுங்கி நிற்கும் அமெரிக்கா!
- 'வீட்டில்' ஒருவருக்கு 'கொரோனா' தொற்று... 'குடும்பமே மருத்துவமனையில்...' வீட்டில் 'யாரும் இல்லாத' நிலையில்... நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்...'
- முதல்வர் மற்றும் 'பிரதமர்' கொரோனா 'நிவாரண' நிதிக்கு... நன்கொடை வழங்கிய 'நட்சத்திர' தம்பதி!
- ‘கொரோனா பரவலை தடுக்கணும்’!.. ‘தேவையில்லாம யாரையும் வெளியே போகவிடமாட்டேன்’.. கையில் கட்டையுடன் இளம்பெண் எடுத்த அதிரடி..!
- 'ரகசியமாக' பறந்த தகவல்... 'சம்பவ' இடத்திற்கே சென்ற போலீசார்... சாமி 'சத்தியமா' இனி பண்ண மாட்டோம்!
- டெல்லியில் இருந்து தென்னிந்தியா நோக்கி கொரோனா படையெடுத்தது எப்படி?... கொரோனாவின் தீவிரம் ஏன் ஈரோட்டில் அதிகமாக உள்ளது?... சிறப்பு தொகுப்பு!
- ‘இரவு உணவு 1.45 மணிக்கு ’!.. ‘ரெஸ்ட்டே இல்லாம வேலை பாக்குறோம்’.. ‘எங்களுக்காக இத மட்டும் பண்ணுங்க’!
- “யாராச்சும் ஏப்ரல் 1-ஆம் தேதி முட்டாள் தினம்னு, கொரோனா நேரத்துல இதெலாம் பண்ணீங்க” .. எச்சரித்த அமைச்சர்!
- “மணிக்கு ஒரு முறை செஃல்பி எடுத்து அனுப்புங்க!”.. ‘வீட்லயே தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு’ .. அமைச்சர் அதிரடி!
- ‘இத்தாலியில் இருந்து வந்த மகன் குடும்பத்தால் பாதிப்பு’... ‘90 வயதில் கொரோனாவை வென்று’... ‘நாட்டுக்கே நம்பிக்கையூட்டிய முதிய தம்பதி’... ‘கைதட்டி ஆரவாரம் செய்த கேரளா மருத்துவர்கள்’... ‘ஆனாலும் செவிலியருக்கு நேர்ந்த சோகம்’!