சென்னையில் கடன் தொல்லை.. குடும்பத்தினரைக் கொன்று.. வங்கி அதிகாரி எடுத்த விபரீத முடிவு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : கடன் தொல்லையின் காரணமாக, மனைவி மற்றும் மகன்களைக் கொன்று, கணவரும் எடுத்துக் கொண்ட விபரீத முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடன் தொல்லை.. குடும்பத்தினரைக் கொன்று.. வங்கி அதிகாரி எடுத்த விபரீத முடிவு
Advertising
>
Advertising

சென்னையின் பெருங்குடியை அடுத்த பெரியார் சாலை என்னும் பகுதியைச் சேர்ந்தவர், மணிகண்டன் (வயது 36). இவரது மனைவி பெயர் தாரா. இந்த தம்பதியருக்கு, பத்து வயதிலும், ஒரு வயதிலும் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

போரூரில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில், துணைத் தலைவர் பொறுப்பில் பணியாற்றி வந்துள்ளார் மணிகண்டன். இவருக்கு, மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடன் தொல்லை

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, மணிகண்டன் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஒரு வருடமாக, போரூர் பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றிலும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல், மணிகண்டன் தனது நண்பர்கள் சிலரிடம், அதிகம் கடன் வாங்கியதாகவும், இதனால் அதிக கடன் சுமைக்கு ஆள் ஆனதாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம்

இதனிடையே,  கடந்த 31 ஆம் தேதியன்று, மணிகண்டன் மற்றும் அவரது மனைவி தாரா ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புத்தாண்டு நாளான நேற்று, மணிகண்டனின் வீட்டில் உள்ளவர்கள் யாரும் வெளியே வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், இன்று காலை, சந்தேகத்தின் பெயரில், அக்கம் பக்கத்தினர், போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அதிர்ச்சி

தொடர்ந்து, அங்கு வந்த துரைப்பாக்கம் போலீசார், மணிகண்டனின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும், கதவு திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, கதவினை உடைத்துக் கொண்டு போலீசார் வீட்டினுள்ளே நுழைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இறந்து கிடந்த குடும்பம்

தாரா மற்றும் இரண்டு மகன்கள் பிணமாக கிடந்ததாக கூறப்படும் நிலையில், தூக்கில் தொங்கிய நிலையில், மணிகண்டனும் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு வேண்டி, உடலை அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர், இது தொடர்பாக, மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, சில அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. தனது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அதிக தொகையை கடனாக பெற்றுக் கொண்ட மணிகண்டன், அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டதாகவும், மிகப் பெரிய அளவில் கடனை தலையில் ஏற்றி வைத்துக் கொண்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

கொலை செய்தது எப்படி?

மேலும், ஏதோ சில காரணங்களுக்காக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார் மணிகண்டன். இதன் காரணமாக, அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பெயரில், ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற மணிகண்டன், தனது இரண்டு மகன்களையும் கொன்று விட்டு, தானும் இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?

வங்கியில் சிறந்த பொறுப்பில், கை நிறைய சம்பளத்துடன் வேலையில் இருப்பதாக கூறப்படும் மணிகண்டன், எதற்காக அதிக தொகை கடன் வாங்கினார் என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. அதே போல, கடந்த இரண்டு மாதங்களாக, அவர் ஏன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் என்பதும், போலீசாருக்கு அதிகம் சந்தேங்ககங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHENNAI, SUICIDE, FAMILY, சென்னை, கடன் தொல்லை, விபரீதம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்