'தட்டு நிறைய சீர்வரிசை'... 'ஜோராக நடந்த வளைகாப்பு'... 'மூக்கு மேல் விரல் வைத்த உறவினர்கள்'... சென்னையில் நடந்த விசித்திரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பூனைக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் ஜோதி குமார். இவரது வீட்டில் நாய் மற்றும் பூனைகளைச் செல்லமாக வளர்த்து வருகிறார். அதில் ஒரு பூனை கருவுற்றிருந்தது. இதனால் அந்த பூனைக்கு வளைகாப்பு நடத்திப் பார்க்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போன்று பூனைக்கும் வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி செல்லமாக வளர்க்கும் பூனைக்குப் பெண் போல அலங்காரம் செய்தும், அதற்கு முன்பு வரிசையாகத் தட்டுகள் வைத்தும் அலங்கரித்தனர்.

பின்னர் 7 விதமான உணவுகள் மற்றும் பூனைக்குப் பிரியமான நண்டு, மீன், இறால் உள்ளிட்ட அசைவ உணவுகளையும் வைத்து நாற்காலியில் அந்த பூனையை அமரவைத்தனர். பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வளையல்களைப் பூனைக்குக் கால்களில் அணிந்து உறவினர்களை அழைத்து வளைகாப்பு நடத்தினார்கள். தனது பிள்ளைகள் போலப் பாவித்து வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே செல்ல பிராணிகள் மீது இவ்வளவு பாசமா என வளைகாப்பிற்கு வீட்டிற்கு வந்த உறவினர்கள் அசந்து போனார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்