'என்ன ஆச்சு நம்ம சென்னைக்கு'... 'இந்த மண்டலங்களின் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா'... பின்னணி காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு எடுத்த தீவிர முயற்சி மற்றும் மக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் காரணமாக கொரோனா பெரும் அளவில் குறைந்தது. இந்த சூழ்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால், கடந்த 26-ம் தேதி, ஆயிரத்து 551 பேர் சிகிச்சையிலிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஆயிரத்து 802-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு வாரக் காலத்தில் குணமடைவோரைவிடக் கூடுதலாக 251 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. மண்டல அளவில் பார்க்கும்போது, திருவொற்றியூரில் கடந்த 26-ம் தேதி 50 பேர் சிகிச்சையிலிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2-ம் தேதி 63-ஆக அதிகரித்துள்ளது.மணலியில் 33-ஆக இருந்த பாதிப்பு, 31-ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் கொரோனா தொற்று   அதிகரித்துள்ளது. அண்ணா நகர், வளசரவாக்கம் பகுதிகளில் சிறிதளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மணலி, அண்ணாநகர், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களைத் தவிர மற்ற அனைத்து மண்டலங்களிலும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்