சென்னை விமான நிலையம் பக்கத்துல குடியிருக்கீங்களா? உங்களுக்குத் தான் இந்த 'அவசர' அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை விமான நிலையத்தை சுற்றி அமைந்திருக்கும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு விமான நிலைய நிர்வாகத்தினர் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

Advertising
>
Advertising

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி உள்ளன. பொங்கல் திருவிழாவின் தொடக்க நாளாக போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.பழையன கழிந்து புதியன புகுதலே போகி பண்டிகையின் சாராம்சம் ஆகும்.

இத்தகை போகி பண்டிகை நாளில் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பார்கள். அவ்வாறு எரிக்கும் போது எழும் புகை பெரிய காற்று மாசுபாடை உருவாக்கும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில் சென்னை விமான நிலைய நிர்வாகம் விமான நிலையத்தைச் சுற்றி அமைந்திருக்கும் பகுதிகளில் வசிப்போருக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விமான நிலையத்தைச் சுற்றி குடியிருக்கும் மக்கள் போகி நாளில் பொருட்களை எரிக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 13-ம் தேதி போகி பண்டிகையின் போது மக்கள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்த வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தைச் சுற்றி அமைந்துள்ள பரங்கிமலை, மீனம்பாக்கம், பழவந்தாங்கல், பம்மல், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த கோரிக்கையை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரம் வீடுகள் தோறும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. போகி பண்டிகையின் போது எழும் புகையால் விமானங்கள் கிளம்பவும், தரை இறங்கவும் சிரமம் ஆக இருப்பதால் இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, சென்னை விமான நிலையம், போகி, பொங்கல், CHENNAI AIRPORT, BOGI, PONGAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்