'அமெரிக்க மாப்பிளைன்னு ஒன்னுக்கு ரெண்டா செஞ்சோம்'... 'கல்யாணம் ஆன முதல் நாளே கேட்ட கேள்வி'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து, அமெரிக்காவில் வேலை கிடைத்து, சென்னை பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தற்போது வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜெயஸ்ரீ என்ற பெண் அண்ணாசாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
"மேட்ரிமோனி மூலம் எனது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது விழுப்புரம் முத்தையா நகரை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் வசந்தன் (33) என்பவர் வரன் பார்க்கப்பட்டது.
பின்னர், கடந்த 2016ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கணவர் வசந்தன் அமெரிக்காவில் இன்ஜினியராக வேலை செய்து வந்ததால் அவர்கள் கேட்ட வரதட்சணை அனைத்தும் எனது பெற்றோர் கொடுத்தனர்.
பிறகு, நான் கணவருடன் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன். அப்போது மீண்டும் அதிகளவில் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் நாங்கள் திருமணம் நடந்த நாள் முதல் இருவரும் ஒற்றுமையாக இல்லை. இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பிறகு இருவரும் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தோம். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் எங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துவிட்டேன். எனது வாழ்க்கை தற்போது கேள்வி குறியாக உள்ளது.
எனவே, அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய எனது கணவர் வசந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
திருமணமான முதல் நாளிலிருந்தே வரதட்சணை கொடுமை இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வசந்தன் மீது வரதட்சணை வழக்கை போலீசார் பதிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து, நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்த வசந்தனை விமான நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஓரமா போய் விளையாடுங்கப்பா!'.. போலி தடியடி நடத்திய போலீஸ்!.. சாதூரியத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ‘இரண்டு ஊர் சண்டை’!
- 'பேக், பாக்கெட்னு எல்லா எடத்துலையும்...' 'சல்லடை போட்டு தேடியும் எங்கையுமே கெடைக்கல...' 'ஆனாலும் 'அந்த ஐட்டம்' அவரு கிட்ட தான் இருந்துருக்கு... - அதிர்ந்து போன அதிகாரிகள்...!
- 'ஹலோ... யாரும்மா நீங்க?.. இது போலீஸ் ஸ்டேஷன்'!.. 'என்னைய பாத்தா யாருனு கேட்ட'!?.. மப்டி உடையில் வந்த பெண் துணை கமிஷனர்!.. பாவம் அந்த பெண் போலீஸ்!
- 'சென்னையில் நடந்து செல்லும் பெண்களை குறிவைக்கும் ஆசாமிகள்'... 'யார் அந்த டூவீலர் ஆசாமிகள்'... தீவிர விசாரணையில் காவல்துறை!
- 'தூங்குறப்போ டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார்...' 'போலீசாரை டென்ஷன் ஆக்கிய திருடன்...' 'யார்னு உடனே கண்டுபிடிச்சாகணும்...' - துப்பு துலக்க உதவிய 'அந்த' சிசிடிவி வீடியோ...!
- ‘ஆபாச வீடியோ எடுத்ததோட நிறுத்தல’!.. காசியால் இளம்பெண்கள் அனுபவித்த கொடுமை.. சிபிசிஐடி தாக்கல் செய்த 400 பக்க குற்றப்பத்திரிக்கை..!
- ‘மஞ்சள் பைக்கில் வந்த 3 பேர்’.. தனியாக சைக்கிளில் சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி.. அடுத்த சில மணிநேரத்திலேயே போலீசார் காட்டிய அதிரடி..!
- '2020 எப்படி போச்சு'... 'பெசன்ட் நகரில் பெண்களிடம் யூடியூப் சேனல் எடுத்த 'ஆபாச’ பேட்டி'... காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
- ‘சினிமா, சீரியல் ஆசையில்... சென்னை வரும் பெண்கள் தான் டார்கெட்.. பாலியல் தொழிலுக்கு தள்ளும் ‘மோசடி’ கும்பல்!.. ‘மிரள வைக்கும்’ சம்பவம்!!!
- 'என் மாமியாரும், மனைவியும் என்ன செருப்பால அடிச்சாங்க பா'... 'சிக்கிய 22 பக்க கடிதம்'... 'பையன் மனசுக்குள்ள இருந்த குமுறல்'... நொறுங்கி போன தந்தை!