'காதலிக்காக போட்ட கடத்தல் டிராமா...' 'ஆனா மேல இருந்த சிசிடிவி நடந்த உண்மைய...' - வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிடுச்சே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னுடைய காதலிக்காக கடத்தல் நாடகமாடிய கணவரை காவல்துறையினர் சிசிடிவி வீடியோ ஆதாரத்துடன் கையும் களவுமாக பிடித்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது.

சென்னை கொரட்டூரில் சொந்தமாக இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார் அமர்நாத். இவர் கடந்த 4-ம் தேதி தன் மனைவியிடம் போனில் தன்னை யாரோ மர்மக்கும்பல் தன்னை கடத்தியதாகவும், தன் கையில் இருந்த 4 லட்சம் பணம், தங்க நகைகள் மற்றும் ஏ.டி.எம் கார்டில் 40 ஆயிரம் பணத்தையும் எடுத்துவிட்டு, காரையும் கடத்தி சென்றுள்ளதாக பதற்றத்துடன் கூறியுள்ளார்.
கணவனின் நிலையை அறிந்த மனைவி, அமர்நாத் சொன்ன அனைத்தையும் காவல்துறையினரிடம் போன் செய்து புகார் அளித்துள்ளார்.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அமர்நாத் கொள்ளை நடத்தப்பட்டதாக சொன்ன இடத்தின் சிசிடிவி வீடியோவை எடுத்து பார்த்ததில், அமர்நாத் ஒரு காரில் தானே ஏறிச் செல்வதும், தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் கங்கா என்ற பெண்ணுக்கு பணத்தை பரிமாற்றம் செய்திருப்பதும் தெரியவந்ததுள்ளது.
மனைவி சொன்ன புகாருக்கும், கணவரின் செயலுக்கும் வித்தியாசம் இருக்கவே குழப்பமடைந்த போலீசார், அமர்நாத் கடத்தப்பட்டதாகக் கூறிய காரில் அன்றைய தினம், கனகா, பிரபு, விக்னேஷ் என்ற மூவரை பிடித்து விசாரித்ததில் நடந்தது திட்டமிட்ட ஒரு நாடகம் என்பது அம்பலமானது.
மேலும் அமர்நாத் மற்றும் கனகா இருவரும் தவறான உறவில் இருந்து வந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு அமர்நாத்திடம் 6 சவரன் தங்க நகையை கொடுத்ததாகவும், அதை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாகவும், தற்போது தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாங்கிய நகையை கொடுக்க முடியவில்லை என்று கூறிய அமர்நாத், அன்றைய தினம், தன்னிடமிருந்த மோதிரம், பணம், வங்கி இருப்பு என உள்ளிட்டவற்றை கொடுத்ததாகவும் கனகா கூறியுள்ளார்.
இதனை தன் மனைவியிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல்தான் இதுபோன்ற கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அமர்நாத் மீது வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து மட்டும் அனுப்பியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் நாளை (07-11-2020)... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே!'...
- சூரி வழக்கை விசாரித்து வந்த ‘நீதிபதி எடுத்த திடீர் முடிவு!’.. ‘விஷ்ணு விஷாலின்’ தந்தை மீதான வழக்கில் ‘பரபரப்பு’ திருப்பம்!
- சென்னை மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. இனி புறநகர் ரயிலில் யாரெல்லாம் போகலாம்?.. வெளியான ‘புதிய’ அறிவிப்பு..!
- 'நீங்க தேடி போக வேணாம்'...!!! 'மக்களை தேடி வரும் நடமாடும் அம்மா உணவகம்...!!! ‘அதிரடியாக துவங்கி வைத்தார் தமிழக முதல்வர்’...!!! ‘எங்கெல்லாம் கிடைக்கும்’...!!
- காதலி வீட்டில் ‘புதைக்கப்பட்ட’ நகைகள்.. காட்டிக்கொடுத்த ‘மீசை’.. தி.நகர் நகைக்கடை கொள்ளையில் வெளியான ‘பரபரப்பு’ தகவல்..!
- ‘6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை’...!! ‘வெளுத்து வாங்கப் போகும் மழை’...!!! ‘வெதர்மேன் சொல்வது என்ன’???
- ‘நடிகை அமலா பால் தாக்கல் செய்த கோரிக்கை மனு விவகாரம்!’.. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு!
- 'சென்னையில் தொடர்ந்து குறையும் பாதிப்பால்'... 'இன்னும் ஒரு ஏரியாதான் அப்படி இருக்கு!'... 'வெளியான ஹேப்பி நியூஸ்!!!'...
- 'இதுதானா அந்த புதிய கோர்-குரூப்???'... 'அப்போ ரெய்னாவின் நிலை?'... 'சந்தேகத்தை வலுவாக்கியுள்ள தோனியின் பேச்சு!!!'...
- 'அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு?!!'... 'பிரபல CSK வீரர் திடீர் முடிவு!!!'... 'வெளியான பரபரப்பு தகவல்!'...