‘திறந்து’ கிடந்த கதவு... உள்ளே சென்ற ‘மாமனாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘திருமணமான’ ஒரே மாதத்தில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘திறந்து’ கிடந்த கதவு... உள்ளே சென்ற ‘மாமனாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘திருமணமான’ ஒரே மாதத்தில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...

சென்னை கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவை சேர்ந்தவர் லோகேஷ். இவருக்கும் ராணிப்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி (30) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று லோகேஷ் அவருடைய தாய், தந்தையுடன் தபால் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வேலை தாமதமானதால் லோகேஷின் தந்தை மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருக்க, உள்ளே சென்று பார்த்தபோது மகாலட்சுமி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ந்துபோன லோகேஷின் தந்தை மகாலட்சுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் மகாலட்சுமி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

CRIME, SUICIDEATTEMPT, CHENNAI, MARRIAGE, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்